ஐப்பசி பௌர்ணமி அன்று ஆண்கள் செய்யவேண்டிய பரிகாரம்
பௌர்ணமி என்றாலே பல சிறப்புகளை கொண்டது.அப்படியாக ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி சிவபெருமானுக்கு மிக விஷேசமாக கருதப்படுகிறது.அன்றைய தினத்தில் உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களின் பசியை போக்கும் விதமாக சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.அன்றைய நாளில் முக்கியமாக ஆண்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகம் பார்த்தால் கோடிபுண்ணியம் கிடைக்கும் என்று சொல்ல படுகிறது.மேலும் அன்று சிவபெருமானை வழிபாடு செய்வதால் வாழ்க்கையில் ஏற்பட்ட வறுமை நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும்.
இவ்வளவு சிறப்பான நாளில் ஆண்கள் இந்த நான்கு காரியங்கள் செய்ய வாழ்க்கையில் நல்லதோர் மாற்றம் கிடைக்கும். காக்கைக்கு உணவு வைத்தல் என்பது ஒரு சிறந்த பரிகாரம்.அப்படியாக அன்றைய தினம் காலையில் ஆண்கள் உணவு அருந்துவதற்கு முன்பாக காகத்திற்கு உணவு வைத்து விட்டு சாப்பிடவேண்டும்.அவ்வாறு செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் படி படியாக குறையும்.
மிக முக்கியமாக அன்றைய தினம் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வது மிக சிறந்த பலனை கொடுக்கும்.எப்பொழுதும் இறை பாடல் மந்திரங்கள் கேட்பதும் பாடுவதும் நல்ல மாற்றத்தை வழங்கும்.
அப்படியாக அன்றைய தினம் தெரிந்த சிவன் பாடல்கள் மந்திரங்கள் படிப்பதாலும் கேட்பதாலும் மன குழப்பங்கள் விலகும். மனிதனுக்கு கோபம் நிதானமின்மை என்பது இயல்பாக வரக்கூடிய விஷயம் தான்.
இருந்தாலும் ஐப்பசி பௌர்ணமி அன்று முடிந்த அளவு அமைதியை கடைபிடிப்பது நல்லது. மேற்கொண்டு சொன்ன விஷயங்கள் எல்லாம் மிகவும் எளிமையான சாதாரணமான விஷயம் தான்.இதற்காக பெரிய மெனக்கிடல் தேவை இல்லை.
ஆக முடிந்தவரை ஐப்பசி பௌர்ணமி அன்று இந்த காரியங்கள் செய்ய சிவபெருமானின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |