மாவிளக்கு வழிபாட்டால் ஏற்படும் நன்மைகள்
இந்த பூமியில் நாம் பிறந்ததே நம்முடைய கடமைகள் செய்து வாழ்க்கையை கற்று கொள்வதற்கே.அப்படியாக இந்த வாழ்க்கையில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும்.சமயங்களில் மிகவும் சுலபமாக நடக்கும் விஷயங்கள் கூட பல தடங்கல் சந்திக்க நேரிடும்.அப்பொழுது நாம் மிகவும் வருந்துவது உண்டு.
அப்படியான நேரத்தில் நாம் உடைந்து போகாமல் இறைவனை மனதார வழிபாடு செய்து சில பரிகாரங்கள் செய்ய நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல் விலகி அந்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.நம் இப்பொழுது காரிய தடங்கல் ஏற்படும் பொழுது செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
நாம் பலரும் மாவிளக்கு பரிகாரத்தை கேள்வி பட்டு இருப்போம்.ஆனால் பலருக்கும் இந்த வழிபாட்டை பற்றிய முக்கியத்துவம் தெரிவதில்லை.நம்முடைய தடைகள் விலக மாவிளக்கு பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம். நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இஷ்ட தெய்வங்கள் இருப்பார்கள்.
அப்படியாக விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பதி வெங்கடாஜலபதிக்காக சனிக் கிழமைகளிலும், விநாயகர், முருகன், மாரி அம்மன், காளி அம்மன், காமாட்சி அம்மன் போன்ற தெய்வங்களிடம் விருப்பத்தை தெரிவிக்க விரும்பினால், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளிலும் இவ்வழிபாட்டை செய்யலாம். இடித்து சலித்த பச்சரிசி அல்லது தினைமாவில் ஏலக்காய்,வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
அதை காமாட்சி விளக்குபோல குழிவாகப் பிடித்து, அதனுள் நெய்விட்டு பஞ்சுத்திரி போட வேண்டும். மேலும் நம் இஷ்ட தெய்வத்தின் முன் ஒரு வாழை இலை அல்லது தாம்பாளத்தில் இரண்டு தேங்காய் முறிகள், பழம், வெற்றிலை பாக்கு மற்றும் மாவிளக்கை வைத்து ஏற்ற வேண்டும்.
விளக்கேற்றியதும், நாம் எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றுகிறோமோ,அந்த தெய்வத்தின் பாடல்களோ மந்திரத்தையோ சொல்லி வழிபட வேண்டும்.இந்த விளக்கு கட்டாயமாக 24 நிமிடம் எரிவது அவசியம்.பிறகு உங்கள் விருப்பங்கள் நிறைவேறிய பிறகு மீண்டு ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்வது அவசியம். இந்த வழிபாடு குலதெய்வங்களுக்கும் செய்யப்படுகிறது.
இந்த வழிபாட்டினை மாவிளக்கு ஏற்றுதல், மாவிளக்கு பார்த்தல் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.சமயங்களில் நமக்கு தீராத தலைவலி, கால் வலி, கை வலி, உடல் வலி உள்ளிட்டவற்றால் அவதிப்படுவதுண்டு.
அதிலிருந்து விடுபட மாவிளக்கு ஏற்றுகிறார்கள். அவர்களுக்கு எந்த பகுதியில் வலி ஏற்பட்டு அவதிப்படுகிறார்களோ, அந்த பகுதியில் மாவிளக்கை ஏற்றி வழிபடுகிறார்கள். அப்படி மாவிளக்கு ஏற்றி வழிபடும் போது அம்மன் தங்களது நோய்களை குணப்படுத்துவதாக நம்புகின்றனர்.
அவ்வாறான வேண்டுதல்களின் போது நோயுற்றவரை படுக்க வைத்து மாவிளக்கை வாழை இலையின் மீது வைத்து கண்கள், கைகள், மார்பு, வயிறு உறுப்புகளின் மீது வைக்கின்றனர். மாவிளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரியிட்டு விளக்கேற்றுகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |