இன்றைய ராசி பலன்(23.01.2025)

Report

மேஷம்:

நீங்கள் எடுக்கும் முயற்சியை ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்பட வேண்டும்.இன்று யார் சொல்வதையும் எளிதில் நம்பி விட வேண்டாம்.அலுவலகத்தில் சில பிரச்சனைகள் உண்டாகும்.

ரிஷபம்:

உடல் நிலையில் உண்டான பாதிப்புகள் விலகும்.வெளியூர் செல்ல நேரிடலாம்.குடும்பத்தில் தேவை இல்லாத வாக்கு வாதம் தவிர்ப்பது நல்லது.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.நன்மையான நாள்.

மிதுனம்:

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை ஒன்று நல்ல முடிவிற்கு வரும்.நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.செய்த தவறை நினைத்து மனம் வருந்துவீர்கள்.சிந்திக்க வேண்டிய நாள்.

கடகம்:

குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். அவசர செயல்களால் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்:

இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களிடம் சண்டைகள் வர வாய்ப்புள்ளது.ஆதலால் மிக கவனமாக இருக்க வேண்டும்.நேற்று வரை இருந்த மன வருத்தம் முற்றிலுமாக விலகும்.

கன்னி:

வியாபாரத்தில் இருந்த தடை விலகும். புகழ்ச்சிக்கு மயங்காமல் செயல்படுவது அவசியம்.அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.மகிழ்ச்சியான நிலை ஏற்படும்.

வெற்றிகள் குவிய வாரத்தில் 7 நாட்கள் அணிய வேண்டிய அதிர்ஷ்ட நிறங்கள்

வெற்றிகள் குவிய வாரத்தில் 7 நாட்கள் அணிய வேண்டிய அதிர்ஷ்ட நிறங்கள்

துலாம்:

உங்களுடைய நல்ல அணுகுமுறையால் இன்று எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.மனதில் ஒரு வகையான சந்தோசம் உண்டாகும்.வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள்.சந்தோஷமான நாள்.

விருச்சிகம்:

வரவேண்டிய பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.வெளியூர் பயணத்தால் மனதில் சோர்வு உண்டாகும். செலவு கூடும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.

தனுசு:

விலகி சென்ற உறவு உங்களை தேடி வரும்.பிள்ளைகளால் உண்டான பிரச்சன்னை நல்ல முடிவிற்கு வரும்.உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் துணையாக இருப்பார்கள்.மகிழ்ச்சியான நாள்.

மகரம்:

உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். கடன்களை அடைப்பீர்.நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர். உறவினர்கள் உங்களைத் தேடிவருவர்.

கும்பம்:

உங்கள் விருப்பங்கள் இன்று பூர்த்தியாகும். வருவாய் உயரும். வழிபாட்டில் பங்கேற்பீர்.உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மீனம்:

மனதில் தேவை இல்லாத குழப்பம் உண்டாகும்.நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் ஒன்று நடக்கும்.குலதெய்வம் கோயில் சென்று மகிழ்வீர்கள்.அலைச்சல் அதிகரிக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

       

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US