கார்த்திகை முதல் நாள் வீட்டில் தீபம் ஏற்றும் முறை
கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது தீபம் தான்.இந்த மாதம் ஒளி நிறைந்த மாதம் என்றே சொல்லலாம்.மேலும் இந்த கார்த்திகை மாதம் மாலை அணிவதற்கு உகந்த மாதம் ஆகும்.சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள்,தைப்பூசத்திற்காக மாலை அணிந்து முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பது போன்ற விஷயங்கள் இந்த கார்த்திகை மாதத்தில் தான் நடைபெறும்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்டது இந்த கார்த்திகை மாதம்.அப்படியாக இந்த மாதம் முதல் நாளில் இருந்தே வீட்டு நிலை வாசலில் காலை மாலை வேளைகளில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது உண்டு.அந்த வகையில் கார்த்திகை முதல் நாள் நம்முடைய வீட்டில் எவ்வாறு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்று பார்ப்போம்.
கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு ஒரு குத்து விளக்கு மேலும் 11 அகல் விளக்கை எடுத்து கொண்டு அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு எடுத்து கொள்ளவேண்டும்.குத்து விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து முகங்களிலும் பஞ்சுத்திரி போட்டு தயார் செய்து மாலை 6:00 மணிக்கு இந்த தீபங்கள் அனைத்தையும் ஏற்ற வேண்டும்.
ஏற்றிய பிறகு இந்த தீபத்திற்கு முன்பாக பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், அப்பம், எலுமிச்சை சாதம் என்று ஐந்து வகை பிரசாதங்களில் தங்களால் முடிந்த ஏதேனும் மூன்று அல்லது ஒரு பிரசாதம் வைத்து நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.
பிறகு நாம் ஏற்றி வைத்திருக்கும் அந்த 11 அகல் விளக்கில் இரண்டு அகல் விளக்கை வீட்டு நிலை வாசலிலும் இரண்டு விளக்கை சமையலறையிலும் ஒரு அகல் விளக்கை வரவேற்பறையிலும் வைத்து விட வேண்டும். மீதம் இருக்கும் அந்த ஆறு அகல் விளக்கை குத்து விளக்கை சுற்றி வைத்து விட வேண்டும்.
இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரமாவது எரிவது சிறப்பாகும்.இவ்வாறு முதல் நாள் நம்முடைய வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது நம் வீட்டில் இருந்த எதிர்மறை எண்ணங்கள் தீய சக்திகள் மேலும் பண கஷ்டங்கள் இவை எல்லாம் விலகி சந்தோசம் நிலவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |