நினைத்த காரியம் கைகூட காலபைரவர் துதி
சிவபெருமானின் அவதாரங்களில் காலபைரவர் அவதாரம் ஒன்று. சிவபெருமானின் அவதாரங்களை வழிபட அந்த அவதாரத்திற்கு ஏற்ப நமக்கு பலன்களும் முக்தியும் கிடைக்கும். அந்த வகையில் காலபைரவர் வழிபாடு மிக சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது.
ஒருவர் காலபைரவரை வழிபட ஆரம்பித்த நாள் முதலில் இருந்து அவர்களுக்கு பயம் விலகி நினைத்த காரியம் கைகூடி வரும்.
மேலும் கால பைரவரை வழிபட பிரம்மகத்தி தோஷம் திருமண தடை விலகும் என்கின்றனர்.
பைரவ மூர்த்தி என்பவர் சனியின் குருஆவார். ஆகையால் ஏழரை சனி ஜென்ம சனி அஷ்டமத்து சனி காலங்களில் பைரவரை வழிபட சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
போட்டி, பொறாமைகளில் இருந்து நம்மை காப்பாற்றி வெற்றி பெற காலபைரவர் துதி உதவியாக இருக்கும்
கறையணி கண்டதத் தம்மான்
கருத்தினிலே தோணினானை
மறையணி பூணுவானை மழுவொரு
சூலத் தானை
குறையணி அகந்தையாளர்
குணத்தினை அடக்குவானை
சிறையறுவடுகன் தாளைச்
சிந்தையில் வாழ்த்துவோமே"
. திருவுறைச் சொல்லு மாகித்
தெறிமனம் பொருளு மாகி
வருபொருட் செல்வம்
ஞானம் வளர்புகழ் தானேயாகிப்
பெருவினை அகல நாளும்
பிதற்றுவார் உள்ளேதோன்றும்
திருவினை வயிரவ தேவை திருந்தடி
வாழ்த்துவோமே"
."புலரிதன் கதிர்களாகிப்
புவிக்கெலாம் ஒளியானானை
மலரினை மலர்த்துவானை
உலகெலாம் ஆகிவேறாய்
உயிருடன் ஒன்றுவானை நிலமதில்
வயிரவன்தாள்
நினைந்து நாம் வாழ்த்துவோமே".
இதை நாம் தினம் சொல்லி வர காரிய தடை மற்றும் பயம் விலகி வெற்றிகள் வந்தடையும்.