சக்தியின் உச்ச தெய்வமான ஆதி பராசக்தியின் மிக உயர்ந்த அம்சங்களில் ஒன்று காமாட்சி அம்மன்.
காஞ்சி காமாட்சி அம்மனின் அருள்வாக்கு முழுவதும் நிறைந்திருக்கும் 108 போற்றிகளில் நிறைந்திருக்கும்.
வெள்ளிக்கிழமை தோறும் பெண்கள் காஞ்சி காமாட்சி அம்மனின் 108 போற்றிகளை சொல்லி வர துன்பங்கள் விலகி நற்பலன்கள் கிடைக்கும்.
காமாட்சி அம்மன் 108 போற்றிகள்
- ஓம் அருளுருவான அன்னையே போற்றி
- ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
- ஓம் அருமறையின் முதல்வியே போற்றி
- ஓம் அறம் வளர்த்த தாயே போற்றி
- ஓம் ஆதிபீடா பரமேஸ்வரியே போற்றி
- ஓம் அகந்தையை தீர்ப்பளே போற்றி
- ஓம் அரனாரின் நாயகியே போற்றி
- ஓம் அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
- ஓம் அன்பர்களை காப்பவளே போற்றி
- ஓம் ஆதி காமாட்சியே போற்றி
- ஓம் ஆலமுண்டோன் துணைவியே போற்றி
- ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி
- ஓம் ஆனந்த வல்லியே போற்றி
- ஓம் ஆதிபராசக்தியே போற்றி
- ஓம் ஆறுமுகனுக்கு வேல் தந்தோய் போற்றி
- ஓம் இகபரம் அளிப்பாய் போற்றி
- ஓம் இதம் தரும் ஈஸ்வரியே போற்றி
- ஓம் இமவானின் கொடியே போற்றி
- ஓம் இன்சுவை கரும்பே போற்றி
- ஓம் இமயத்தின் அரசியே போற்றி
- ஓம் இல்லாமை நீக்குவாய் போற்றி
- ஓம் இடபாக நாயகியே போற்றி
- ஓம் இன்னல்கள் தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஈஸ்வரனின் நாயகியே போற்றி
- ஓம் ஈவதற்கு உகந்தாய் போற்றி
- ஓம் ஈரேழுலகம் காப்பாய் போற்றி
- ஓம் ஈனப்பிறவி அறுப்பாய் போற்றி
- ஓம் உம்பர்கட்கு அரசியே போற்றி
- ஓம் உயிரனைத்தும் காப்பவளே போற்றி
- ஓம் உயர் வாழ்வு தருவாய் போற்றி
- ஓம் உள்ளிருந்து அருள்வாய் போற்றி
- ஓம் உலகத்தார்க்கு உயிரே போற்றி
- ஓம் உமையாம்பிகையாய் நின்றாய் போற்றி
- ஓம் ஊனுயிராய் நின்றாய் போற்றி
- ஓம் ஊழ்வினை அகற்றுவாய் போற்றி
- ஓம் ஊமைக்கு அருளினாய் போற்றி
- ஓம் ஊர்காக்கும் உமையே போற்றி
- ஓம் எங்கள் குல தெய்வமே போற்றி
- ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி
- ஓம் எங்கள் பிணி தீர்ப்பாய் போற்றி
- ஓம் எண்திசை வென்றாய் போற்றி
- ஓம் எப்போதும் எங்களை காப்பாய் போற்றி
- ஓம் எமை ஆளும் இறைவி போற்றி
- ஓம் எம்முயிர் துணையே போற்றி
- ஓம் என்றுமே கன்னி போற்றி
- ஓம் ஏகம்பன் துணைவியே போற்றி
- ஓம் ஏற்றத்தை அளிப்பாய் போற்றி
- ஓம் ஏழுலகம் ஈன்றாய் போற்றி
- ஓம் ஏழைக்கு அருள் புரிவாய் போற்றி
- ஓம் ஏழ்பிறப்பும் துணையே போற்றி
- ஓம் ஐங்கரனின் அன்னையே போற்றி
- ஓம் ஐந்தெழுத்தின் நாயகியே போற்றி
- ஓம் ஒப்புமை இல்லா உருவே போற்றி
- ஓம் ஒப்பில்லா மணியே போற்றி
- ஓம் ஒளிவடிவான நாயகியே போற்றி
- ஓம் ஓம்கார சொரூபியே போற்றி
- ஓம் ஓசை ஒளியானாய் போற்றி
- ஓம் ஓதினர் மனத்து ஒளியே போற்றி
- ஓம் ஒளசதமான அருளே போற்றி
- ஓம் கற்பக கனியே போற்றி
- ஓம் கருணைக்கு வித்தே போற்றி
- ஓம் கண்ணினுள் மணியே போற்றி
- ஓம் கதி தரும் ஒளியே போற்றி
- ஓம் காலத்தை வென்றாய் போற்றி
- ஓம் காஞ்சியில் அமர்ந்தாய் போற்றி
- ஓம் குங்கும நாயகியே போற்றி
- ஓம் குறை நீக்கி காப்பாய் போற்றி
- ஓம் சங்கரன் துணையே போற்றி
- ஓம் சங்கடம் தவிர்ப்பாய் போற்றி
- ஓம் சக்தி சாம்பவியே போற்றி
- ஓம் சகலமும் அருள்வாய் போற்றி
- ஓம் சுந்தர நாயகியே போற்றி
- ஓம் சுகம் தரும் தேவியே போற்றி
- ஓம் சூலத்தை தரித்தாய் போற்றி
- ஓம் சூட்சும செல்வி போற்றி
- ஓம் ஜெகமெலாம் காப்பாய் போற்றி
- ஓம் செருக்கினை அறுப்பாய் போற்றி
- ஓம் ஞானத்தை அருள்வாய் போற்றி
- ஓம் ஞானியர் துணையே போற்றி
- ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
- ஓம் தீஞ்சுவை கனியே போற்றி
- ஓம் தென்னவன் மகளே போற்றி
- ஓம் தேனார் மொழியாய் போற்றி
- ஓம் நற்றவக் கொழுந்தே போற்றி
- ஓம் நான்மறை பொருளே போற்றி
- ஓம் நிம்மதி அளிப்பாய் போற்றி
- ஓம் நீதிக்கு அரசே போற்றி
- ஓம் பக்தரை காப்பாய் போற்றி
- ஓம் பாவத்தை அறுப்பாய் போற்றி
- ஓம் புண்ணியப்பொருளே போற்றி
- ஓம் போற்றுவார்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் மங்கலம் அருள்வாய் போற்றி
- ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
- ஓம் மாங்காட்டில் வாழ்பவளே போற்றி
- ஓம் முழுதருள் விழியாய் போற்றி
- ஓம் மூவர்க்கும் முதலே போற்றி
- ஓம் மோனத்தின் வரம்பே போற்றி
- ஓம் நினைத்ததை முடிப்பாய் போற்றி
- ஓம் நீள் நிதி வாழ்நாள் அருளும் போற்றி
- ஓம் கேட்ட வரம் அருள்வாய் போற்றி
- ஓம் சங்கரியே போற்றி
- ஓம் சிவகாமி தாயே போற்றி
- ஓம் சிந்தனையில் நிறைந்தவளே போற்றி
- ஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி
- ஓம் தேவர்கள் தொழும் தேவியே போற்றி
- ஓம் நலம் தரும் காமாட்சியே போற்றி
- ஓம் நன்மை அனைத்தும் அருள்வாய் போற்றி
- ஓம் மகாசக்தியே தாயே போற்றி போற்றி
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Mr. Ramji Swamigal
4.7 145 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US