கண் திருஷ்டி விலக ஒருமுறை இதை செய்து பாருங்கள்

By Sakthi Raj Mar 11, 2025 11:58 AM GMT
Report

மனிதனின் மிக பெரிய போராட்டங்களில் இந்த கண் திருஷ்டியும் ஒன்று. நெருங்கியவர்கள் வளர்ந்து விட்டால் பொறாமையால் சூழ்ந்து விடுவார்கள். அவர்களின் அந்த கெட்ட பார்வை நம்மை எப்படிவேண்டுமாலும் பாதிப்பை உண்டாக்கும்.

அவ்வாறான கண் திருஷ்டி விலக நாம் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி பார்ப்போம். மனிதர்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவதை காட்டிலும் இவ்வாறான கண் திருஷ்டியில் இருந்து பாதுகாத்து கொள்வது தான் மிகவும் கடினமாக இருக்கிறது.

அவ்வாறு அந்த கண் திருஷ்டி விலக,நாம் பல பரிகாரம் செய்திருப்போம். அதில் பலருக்கும் தெரியாத பரிகாரம் ஒன்றை பற்றி பார்ப்போம்.

கண் திருஷ்டி விலக ஒருமுறை இதை செய்து பாருங்கள் | Kan Thirshti Easy Parigaram

ஒவ்வொரு கோவிலுக்கும் ஆகம விதிப்படி ஒரு ஸ்தல விருட்சம் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த ஸ்தல விருட்சம் மரம் அந்த கோயிலின் காவல் தெய்வம் என்றே சொல்லலாம். வன்னி மரம், வில்வமரம், துளசி, அரசமரம் என்று கோவிலின் தல விருட்சமாக இருக்கும் மரத்தடிக்கு செல்லுங்கள்.

அப்படியாக,கோயில் வழிபாட்டை முடித்துவிட்டு ஸ்தல விருட்சம் மரத்தின் அடியில் ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து கொள்ளுங்கள். அந்த மண்ணை கொண்டு வந்து நம்முடைய பூஜை அறையில் வைத்து விடவேண்டும்.

பிறகு,நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சிலரது எண்ணங்கள்,பொறாமைகள் இவை எல்லாம் நம்மை விட்டு விலக வேண்டும் என்று கடவுளிடம் மனதார பிராத்தனை செய்து கொள்ளவேண்டும்.

தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க.. இந்த தெய்வங்களை வணங்குங்கள்

தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க.. இந்த தெய்வங்களை வணங்குங்கள்

பின்பு நீங்கள் கோவிலில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த ஸ்தல விருட்ச மண்ணை ஒரு மஞ்சள் துணியில் போட்டு மூட்டை போல கட்டுங்கள்.

மஞ்சள் துணி இல்லாவிட்டால், வெள்ளை துணியில் மஞ்சளை நனைத்து காய வைத்து பின்னர் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மூட்டையை வீட்டு வாசலுக்கு உட்புறமாக மேல்பாகத்தில் கட்ட வேண்டும். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

கண் திருஷ்டி விலக ஒருமுறை இதை செய்து பாருங்கள் | Kan Thirshti Easy Parigaram

அதாவது தல விருட்சம் மண் மிகவும் புனிதமானது. இது தீய சக்திகளை நம்மிடம் நெருங்க விடாமல் தடுக்கிறது. இதனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் வீட்டில் கட்ட வேண்டும். அது போல விருட்ச மண்ணை எடுக்கும் பொழுது வெள்ளி அல்லது புதன்கிழமையில் எடுப்பது நல்லது.

ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய கிழமைகளில் விருட்ச மண்ணை தொடாதீர்கள். இந்த ஸ்தல விருட்ச மண்ணை நாம் குலதெய்வம் கோயிலில் இருந்து எடுத்து கொண்டு வரலாம்.

இவ்வாறு கொண்டு வந்து வீட்டில் கட்டும் பொழுது நம்மை எந்த ஒரு தீய சக்திகளும் நெருங்க விடாமல் தடுத்து காக்கிறது. அது மட்டும் அல்லாமல் செய்வினை பிரச்சனைகள் பில்லி சூனியம் போன்ற எதற்கும் இது பலன் தராது.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US