கோலாகலமாக நடந்த காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகம்
காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் திகதி பாலாலயம் மற்றும் திருப்பணி தொடங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோவில் வளாகத்தில் யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டது.
இங்கு கடந்த 30ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
1ஆம் திகதி மாலை முதற்கால பூஜையும், அதனை தொடர்ந்து கடந்த 2, 3ஆம் திகதி காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
நேற்று காலை 6வது கால யாகபூஜை, பூர்ணாகுதி, கடம்புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 8 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விமான சலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |