பிறரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட்டீர்களா? உங்கள் கர்மா உங்களை காப்பாற்றி விட்டது
சில நேரங்களில் நாம் ஒரு சில பொருட்களையோ அல்லது ஒருவரிடம் ஏமாந்து நிற்கக்கூடிய ஒரு அவநிலை ஏற்படுகிறது. பலரும் இறைவனிடம் எதற்காக இந்த கஷ்டம் என்று இறைவனை மண்டியிட்டு கேட்டு அழுவது உண்டு. உண்மையில் நம் உயிரை விட பொருட்களுக்கு மதிப்பு அதிகமா என்று கேட்டால் கட்டாயமாக இல்லை.
அந்த வகையில், நீங்கள் யாரிடமாவது பணம் கொடுத்து ஏமாந்து விட்டாலோ அல்லது உங்களுடைய பணத்தை நீங்கள் தொலைக்க நேர்ந்தாலும் உங்களுடைய கர்மா உங்களை காப்பாற்றியது என்று சொல்கிறார்கள்.
இந்த உலகத்தில் மிகப்பெரிய துயரத்தில் ஒன்று நம்முடைய உயிர் பிரிவது. அடுத்ததாக நம்முடைய உழைத்த பணத்தை ஒருவர் திருடுவது அல்லது யாரிடமாவது பணத்தை கொடுத்து நாம் ஏமாந்து நிற்பது.

இந்த விஷயங்கள் தான் மிகப்பெரிய துயரங்களாக இருக்கிறது. அந்த வகையில், நாம் செய்த நல்ல கர்மாக்கள் நம்மை பல நேரங்களில் காப்பாற்றுகிறது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அது போன்று தான் நாம் பணத்தை தொலைக்க நேரும் அந்த காலகட்டமும்.
அதாவது, பணம் தொலைந்து நமக்கு உயிர் சேதம் ஏற்படாமல் அந்த குடும்பத்தை காப்பாற்றது அந்த நல்ல கர்மா. ஆனால், ஏமாற்றியவர்களுக்கு நிச்சயம் அவர்களுக்குரிய கர்மாவும் சென்று சேரும் என்றாலோ அந்த காலகட்டம் நமக்கு உயிர் சேதம் ஏற்படாமல் காப்பாற்றியது அந்த கர்ம வினை என்று சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |