பழனியில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா.., காப்பு கட்டி இன்று தொடக்கம்

By Yashini Dec 09, 2024 06:41 AM GMT
Report

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

சாயரட்சை பூஜைக்கு பிறகு இன்று மாலை 5.30 மணிக்கு மூலவருக்கும், சண்முகருக்கும் காப்பு காட்டியதை தொடர்ந்து துவார பாலகர்கள், நவவீரர்கள், மயில், தீபக்கம்பம் ஆகியவற்றுக்கு காப்பு கட்டப்படும்.

அதன்பின் மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனையும், சண்முகர்தீபாராதனையும் நடைபெறும்.

பழனியில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா.., காப்பு கட்டி இன்று தொடக்கம் | Karthigai Deepam Festival Today In Palani Temple

மேலும், இரவு 7 மணிக்கு தங்க ரத புறப்பாடு நடப்பதை தொடர்ந்து 6 நாட்களும் பூஜைகள் நடைபெறும். 

வருகிற 12ஆம் திகதி முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும்.

திருக்கார்த்திகை தீபம், சொக்கபனை ஏற்றும் நிகழ்வுகள் மறுநாள் 13ஆம் திகதி நடைபெறுகிறது.

அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஷ்வரூப தரிசனம் நடைபெறும். மாலை 4.45 மணிக்கு மேல் சின்னகுமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். 

பழனியில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா.., காப்பு கட்டி இன்று தொடக்கம் | Karthigai Deepam Festival Today In Palani Temple

தொடர்ந்து யாகசாலை தீபாராதனையும், மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு மேல் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கபனை கொளுத்தப்படும்.

அதனைத் தொடர்ந்து திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.          
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US