காவல் தெய்வமான கருப்பசாமி கனவில் வந்தால் கட்டாயம் வாழ்க்கையில் இது நடந்தே தீருமாம்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு காவல் தெய்வம் இருப்பார்கள். தெய்வங்கள் அனைத்தும் மிகவும் சக்தி நிறைந்தது என்றாலும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான தன்மை உண்டு. அப்படியாக, காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமியை எடுத்துக்கொண்டால் அவருக்கு 'பொய்' என்பதே ஆகாது.
இன்னும் சில கிராமங்களில் ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்றால் அவர்கள் எதிர் தரப்பினரை கருப்பண்ண சுவாமி கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்யும்படி கேட்டு நியாயத்தைப் பெற்றுக் கொள்வதை நாம் பார்க்க முடியும்.
காரணம், யாராக இருந்தாலும் கருப்பண்ண சுவாமி முன் பொய் சத்தியம் செய்வதற்கு அஞ்சுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீறி பொய் சத்தியம் செய்தால் சுவாமி சில காலங்களில் அவர்கள் வழியாகவே உண்மையை கொண்டு வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இவ்வளவு சக்தி வாய்ந்த காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமி ஒருவர் கனவில் வருகிறார் என்றால் அவர்கள் வாழ்க்கையில் மேம்பட போகிறார் என்று அர்த்தம். மனிதனாக பிறந்த யாருக்கு தான் வாழ்க்கையில் துன்பமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கைக்கு ஏற்ப துன்பத்தை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த துன்ப காலத்தை கடந்த செல்ல இறைவனை முறையிடுவதை தவிர்த்து அவர்களுக்கு வேறு வழி இல்லை என்றாலும் பல நேரங்களில் இறைவனும் சில பாடம் கற்றுக் கொடுக்க நம்மை விட்டு தூரம் நிற்பதையும் பார்க்கலாம்.
அவ்வாறாக துன்பக் காலத்தில் தவிக்கும் உயிர்களுக்கு இறைவன் அருகில் வராமல் இருப்பது போல் இருந்தாலும் அவர் முழுவதாக கைவிட மாட்டார் என்பதுதான் உண்மை. அந்த வகையில் ஒருவருக்கு கனவில் கருப்பண்ண சுவாமி வருகிறார் என்றால் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த இருள் விலகப் போகிறது என்று அர்த்தம்.
பொதுவாகவே, தெய்வங்கள் கனவுகளில் வந்தால் அவர்கள் மறுநாள் காலையில் எழும்பொழுது வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியை உணரலாம். ஆக, காவல் தெய்வம் அல்லது கருப்பண்ணசாமி போன்ற குல தெய்வங்கள் நம் கனவில் வருவது நம் குடும்பத்தில் நடக்கக்கூடிய நன்மையை குறிக்கிறது.
ஆதலால் மனம் வருத்தம் அடையாமல் தெய்வம் நம்மை விட்டு விலகவில்லை துன்பத்தில் நம்முடன் தான் இருக்கின்றார் என்பதை உணர்ந்து நம்முடைய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவருடைய கனவில் காவல் தெய்வங்களை சந்திக்கிறார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையில் வெகு விரைவில் நடக்கக்கூடிய நல்ல மாற்றங்களை காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







