தீபாவளியில் இருந்து சற்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
நவம்பர் 2 ஆம் தேதி ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் பிறக்கிறது.கார்த்திகை மாதம் என்பது தீபம் மிகுந்த மாதம்.அப்படியாக வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும்.அது தான் கிரக நிலை என்றே சொல்லலாம்.
அப்படியாக அந்த கிரக நிலை மாற்றத்தால் இருளில் இருந்து வெளிச்சம் பெற அடுத்த வருஷ யுகாதி வரைக்கும், அதாவது மார்ச் 29 வரைக்கும் ராசிகளில் நடக்கும் மாற்றங்களை பற்றி பார்ப்போம்.
மேலும் இந்த மாதங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் கிரக நிலைகளோட மாற்றத்தால் என்ன மாறுதல் சந்திக்க போகிறார்கள் என்றும் மார்ச் 29 சனி இடமாற்றம் அடைகிறது.இவை எல்லாம் சேர்த்து வாழ்க்கையில் என்ன மாறுதல்களை கொடுக்க போகிறது என்று தெரிந்து கொள்வோம்.
மேஷம்
இந்த வார ஆரம்பத்துல உங்க ராசி அதிபதியான செவ்வாய் கடக ராசியில் நுழைகிறார்.வீடுகளில் சண்டைகள் வர வாய்ப்புகள் அதிகம்.குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.எதிர்பாராத வேலைப்பளு மனசுமை கொடுக்கும்.ஜனவரி மாதம் இறுதி வரை கவனமா இருக்க வேண்டும்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.பண வரவு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.மேலும் மார்ச் இறுதியில் சனி மற்றும் மீன ராசிக்கு வரும்போது ஏழரை சனி ஆரம்பம் ஆகிறது.அதில் இருந்து உங்க வாழ்க்கை கொஞ்சம் கடினமாக இருக்கலாம்.இருந்தாலும் பயப்பட தேவை இல்லை.
ரிஷபம்
செலவுக்கு அதிபதியான செவ்வாய் தீபாவளி ஆரம்பத்தில் சகோதர ஸ்தானத்துக்கு போறதால்,அண்ணன், தம்பிகளுக்குள்ளேயே மனஸ்தாபம் ஏற்படலாம்.மனதில் துணிச்சல் உண்டாகும்.வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வை மிக தைரியமாக எடுத்து வைப்பீர்கள்.வேலை மட்டும் வியாபாரத்தில் நல்ல மாறுதல் உண்டாகும்.கஷ்டமான சூழல் ஏற்படும் பொழுது பழனி மலை முருகனை தரிசிக்க மனதில் நிம்மதி உண்டாகும்.
மிதுனம்
மிதுனம் ராசி சற்று கவனமாக இருக்க வேண்டும்.எதிர்பாராத ஆபத்துகள் உண்டாகலாம்.கோபமான பேச்சால் உருவங்களில் விரிசல் ஏற்படும்.ஆதலால் பேச்சில் கவனம் அவசியம்.மாணவர்கள் நட்பு வட்டாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஜனவரி கடைசி வரைக்கும் ரொம்ப கவனமா இருப்பது அவசியம்.கணவன் மனைவியே விரிசல் அதிகம் ஆக வாய்ப்பு அதிகம் உள்ளதால் நிதானம் அவசியம்.கஷ்டமான காலங்களில் துர்கை அம்மனுக்கு பஞ்சாமிர்தம் படைப்பது மனஅமைதியை தரும்.
மீனம்
இந்த தீபாவளி தொடக்கத்தில் உடம்பில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.பிள்ளைகளால் பிரச்சனை உண்டாகலாம்.மகன் தந்தை உறவில் மனஸ்தாபம் உண்டாகலாம்.
ஜனவரி பிறகு நல்ல பலன் கிடைக்கும்.இந்த வ்ருடம் மனம் சற்று சரி இல்லாமல் இருக்கலாம்.ஆதலால் கவனம் அவசியம்.ஆதலால் மீன ராசியினர் குரு பகவானுக்கு கடலை, வெல்லம் படைங்க. சனி பகவானுக்கு எள் சாதம் படைத்து வழிபடுவது நல்ல மாற்றத்தை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |