கேதுவுடன் இந்த கிரக சேர்க்கை ஆபத்தை உண்டு செய்யுமாம்.. என்ன தெரியுமா ?
ஜோதிட நம்பிக்கை அடிப்படையில் சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், கலை ஆகியவற்றை குறிக்கக்கூடிய கிரகமாக இருக்கிறார். அந்த வகையில், கேதுவுடன் எந்த கிரகம் இருக்கிறதோ அதனைப் பொருத்து பலன்கள் மாறுபடுகிறது.
அப்படியாக, கேதுவுடன் சில கிரகச் சேர்க்கைகள் ஒரு சில எதிர்மறையான விளைவுகளை கொடுக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
ஒருவர் ஜாதகத்தில் கேது உடன் சூரியன் இணைகின்ற பொழுது சூரிய கிரகண தோஷம் உண்டாகிறது.

அதாவது, ஆத்ம காரகரான சூரியனை கேது மறைப்பதால் இந்த இடத்தில் அவர்களுக்கு சுயமரியாதை, அதிகாரம், தந்தை வழி உறவு மற்றும் அரசாங்க விஷயங்களில் சில தடைகள் மற்றும் மன அழுத்தம் தேவையில்லாத பிடிவாத குணம் ஏற்படலாம்.
இதனால் அவர்களுக்கு வாழ்க்கையில் சில போராட்டம் ஆன நிலையை காணப்படுகிறது. அதேபோல், கேது உடன் சந்திரன் இணைகின்ற பொழுது சந்திர கிரகண தோஷமாக மாறுகிறது.

மனோகாரகன் என்று அழைக்கப்படும் சந்திர பகவானை கேது பிடிப்பதால் இவர்களுக்கு தேவையில்லாத மன குழப்பம், பயம், தனிமை உணர்வு, தாய் வழியால் பாதிப்புகள் முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஆகியவை இவர்கள் சந்திக்கக்கூடிய நிலை வரலாம்.
இருப்பினும் இவர்கள் ஜாதகத்தில் அந்த கிரகங்கள் அமைந்திருக்க கூடிய நட்சத்திரம் மற்றும் அந்த கிரகத்தின் மீது விழக்கூடிய கிரக பார்வைகளை பொருத்தும் பலன்கள் மாறுபடுகிறது.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |