கொல்லிமலையில் சக்தி வாய்ந்த எட்டுக்கை அம்மன் கோயில்
கொல்லிமலை என்றாலே நினைவுக்கு வருவது அதிசயங்களும், மர்மங்களும்தான்.
அங்கே அமைந்துள்ள சக்தி வாய்ந்த அதிசய அம்மன் கோவிலை ஒன்று அமைந்து இருக்கிறது,அதை பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையில் அமைந்துள்ளது எட்டுக்கை அம்மன் திருகோவில். கொல்லிமலைக்கு அழகு சேர்ப்பது கொல்லிப்பாவை என்று கூறப்படும் எட்டுக்கை அம்மனாகும்.
கொல்லிமலைக்கு அசுரர்களின் வருகையை தடுத்து நிறுத்த மாயன் என்னும் தெய்வசிற்பி உருவாக்கிய அழகிய பாவைதான் எட்டுக்கை அம்மன் .
இவருக்கு கொல்லிபாவை என்ற பெயரும் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன் சதுரகிரியில் வாழ்ந்த சித்தர்கள் பல மலைகளைத் தாண்டி கொல்லிமலையை வந்தடைந்தனர்.
கொல்லிமலை ஒரு அடர்ந்த வனப்பகுதியாக இருந்த காரணத்தினால் மேல்களிங்கப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு பாறையின் மீது அமர்ந்து தவம் செய்ய தொடங்கினர்.
அங்கே ஏற்கனவே அங்கு இருந்த அசுரர்களும், மிருகங்களும் சித்தர்களை தொந்தரவு செய்தன. அதை தடுக்கவே ஒரு அம்மனை உருவாக்கினார்கள். அதுவே எட்டுக்கை பாவை அம்மனாவார். அசுரர்கள் சித்தர்களை தொல்லை செய்யும் போது அவர்களை எட்டுக்கை பாவை வதம் செய்தாள்.
காலப்போக்கில் அந்த சிலை அதே இடத்தில் மண்ணில் புதைந்து விட்டது. அங்கிருக்கும் மக்கள் ஆடு, மாடுகளை மேய்க்க செல்லும்போது மாடுகள் ஒரு இடத்தை பார்த்து மிரண்டு ஓடுவதை கவனிக்கிறார்கள்.
எனவே அங்கே தோண்டிப்பார்க்க எட்டுக்கை அம்மன் சிலை அங்கே இருந்தது. அங்கேயே சிறிதாக கோவில் அமைத்து மக்கள் அம்மனை வழிப்பட ஆரமித்தனர்.
இச்சிலைக்கு எட்டுக்கை உள்ளதால் எட்டுக்கை அம்மன் என்ற பெயர் பெற்றது. பொதுவாக அமாவாசை,பௌர்ணமி சமயங்களில் இக்கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
குழந்தை வரம் வேண்டியே அதிகமான பக்தர்கள் அம்மனைக் காண வருகிறார்கள். இந்த அம்மன் பல்லாயிரம் ஆண்டுகளாக கொல்லிமலையிலே வீற்றிருக்கிறாள்.
அங்குள்ள மலை வாழ்மக்கள் குலதெய்வமாக கருதி இவளை வணங்குகின்றனர். நிலம் சம்மந்தமான பிரச்னையை தீர்ப்பதற்காக இங்கு வரும் பக்தர்கள் பூட்டு பூட்டிவிட்டு செல்கிறார்கள்.
இங்குள்ள சூலத்தில் காகிதத்தில் அல்லது உலோகத் தகட்டில் வேண்டுதல்களை எழுதி கட்டிவிட, வேண்டுதல்கள் வெகு சீக்கிரத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மேலும் பிரிந்த உறவுகளின் துணிகளை இங்குள்ள சூலத்தில் கட்டிவிட அவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது ஒரு நம்பிக்கை. திருமணத்தடை, பில்லி சூன்யம் போன்றவற்றை போக்கும் என்று சொல்லப்படுகிறது.
கொல்லிப்பாவை பற்றிய செய்திகளை பரணர் தன் அகத்தினை பாடல்களில் தந்துள்ளார். எட்டுக்கை அம்மன் குமரிகண்டத்துடன் தொடர்புடைய தெய்வம் என்று கூறுகிறார்கள்.
இந்த பாவைக்கென்று இந்த ஒரு கோவில் மட்டும்தான் உள்ளது. இந்த அதிசயம் மிகுந்த கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது சிறந்ததாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |