ரக்ஷா பந்தன் அண்ணன் தங்கை உறவின் ஆழத்தை உணர்த்தும் கிருஷ்ண பகவான்
ரக்ஷா பந்தன் என்பது அண்ணன் தங்கை உறவைக் குறிக்கும் அற்புதமான பந்தம் ஆகும். இந்த உலகில் தாய் தந்தை உறவுகளுக்கு அடுத்தபடியாக அண்ணன் தங்கை உறவுகள் மிகவும் புனிதமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த உறவு ஒரு தாய் வயிற்றில் பிறந்தால் தான் வரவேண்டும் என்பது இல்லை.
இங்கு பலருக்கும் உடன் பிறவா சகோதர சகோதிரிகளாக துணை நின்று அன்பு பாராட்டுபவர்கள் பலர். அப்படியாக, வாழ்க்கை பாடத்தை போதிக்கும் மகாபாரதத்தில் கிருஷ்ணர் திரெளபதியின் அண்ணன் தங்கை உறவு நம்மை கண் கலங்க செய்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
ஒரு முறை போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு மணிக்கட்டில் அடிப்பட்டு விடுகிறது. அதைப்பார்த்து திரௌபதி மனம் பொறுத்துக்கொள்ளாமால் தன்னுடைய சேலையின் ஒரு பகுதியை கிழித்து கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டுகிறாள்.
திரௌபதியின் இந்த செயல் கிருஷ்ணரின் மனதில் திரௌபதி மீது தனி அன்பை ஏற்படுத்தியது. அன்று முதல் கிருஷ்ணர் திரௌபதியை தன் தங்கையாக ஏற்றுக்கொண்டு அவளுக்கு ஏற்படும் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் உனக்கு துணையாக நான் கட்டாயம் நிற்பேன் கைவிடமாட்டேன் என்று உறுதியளித்தார்.
அப்படியாக, திரௌபதியின் துன்ப காலத்தில் கிருஷ்ணர் அவரை விட்டு விலகாமல் துணை நின்றார். அதற்கு ஒரு முக்கிய சான்று தான் துரியோதனன் சபையில் திரௌபதி அவமானம் செய்த பொழுது கிருஷ்ணர் காப்பாற்றி பாதுகாப்பாக நின்றது.
இவர்கள் இடையே உள்ள சகோதர பாசத்தை நாம் மகாபாரதத்தில் பல இடங்களில் காணலாம். அவை சகோதரன் சகோதிரி உறவின் புனிதத்தை நமக்கு எடுத்துரைக்கின்றது.
இவ்வளவு சிறப்பு உணர்வுகள் கொண்ட புனிதமான ரக்ஷா பந்தன் நாளில் நாம் காலையில் குளித்து சகோதரன் கைகளில் ராக்கிகள் கட்டி அவர்கள் நெற்றியில் சிவப்பு நிற திலகம் இட்டு, இனிப்புகள் பரிமாறிக்கொண்டு ஆரத்தி எடுப்பார்கள்.
மேலும், இந்த புனித உறவை ஏற்றுக்கொண்ட சகோதரன் தங்கைகளுக்கு அன்பின் வெளிப்பாடாக பரிசுகள் அளிப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







