பக்தனுக்காக குழந்தையாக வந்து காட்சி கொடுத்த முருகப்பெருமான்
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் அவன் இலக்கை அடைய கட்டாயமாக விடாப்பிடியான நம்பிக்கையும் பிடிவாதமும் இருக்க வேண்டும்.அப்பொழுது தான் எந்த சூழ்நிலையிலும் அவன் எதற்கும் அவன் எடுத்த முயற்சியில் இருந்து பின் வாங்காமல் வெற்றி பெறுவான்.
இவ்வாறு எவன் ஒருவன் முழுமனத்தோடும் நம்பிக்கையோடும் போராடுகிறானோ இந்த உலகம் அவனிடம் தலைவணங்கி வெற்றியை பரிசாக கொடுக்கும்
. இப்படித்தான் ஒரு பக்தனின் பிடித்தவாத நம்பிக்கைக்கு முருக பெருமான் அவரே மனம் இறங்கி வந்து தரிசனம் கொடுக்கிறார்.அவர் யார்?நடந்தது என்னவென்று பார்ப்போம்.
சித்தர்களில் அனைவரும் அறிந்த சித்தராக விளங்குபவர் குதம்பைநாதர்.இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் முருகன் மீது அதீத அன்பும் பக்தியும் கொண்டவர்.குதம்பை என்பது பெண்கள் காதுகளில் அணியும் வளையம்.
குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறார்கள்.உண்மையில் குதப்பும் (சொதப்பும்) மனத்தைத்தான் குதம்பை என்கிறார்.
அப்படியாக,அவர் தினமும் முருகனுக்கு வழிபாடு செய்து முருகப்பெருமானுக்கு தொண்டு செய்வதையே தன்னுடைய பிறவிப்பலனாக எண்ணி வாழ்ந்து வந்தார்.
நம்பிகையோடு சந்தோஷமாக ஒருவன் வாழ்ந்தால்,அதை பார்க்க பொறுக்காமல அவனின் நம்பிகையை ஆணிவேரோடு பிடிங்கி ஏறியத்தான் எத்தனை மனிதர்கள் என்பது போல்,சித்தர் முருகப்பெருமானுக்கு செய்யும் திருப்பணிகளை கேலி செய்ய ஊரில் பல பேர் கிளம்பினார்கள்.
குதம்பைநாதரை பார்த்து பலரும்,நீ இவ்வளவு திருப்பணிகள் செய்கிறாயே முருகன் என்ன உன் முன் வந்து காட்சியா கொடுக்க போகிறார்?என்று அவரின் பக்தியை அவமானம் செய்யும் விதமாக பேசினார்கள்.
முருகன் மட்டுமே என்ற நம்பிகையில் ஓடி கொண்டு இருந்தவருக்கு அதை கேட்டு மனம் பொறுக்காமல் கண்களில் நீர் வழிந்தோடியது.வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் முருகன் இருக்கும் கருவறை சென்று அழுது புலம்புகிறார்.
என் உடம்பில் ஓடும் உயிரும் ரத்தமும் உண்மை என்றால்,இந்த கணம் நான் உன்னை தொழுவது உண்மை என்றால் மனம் இறங்கி தரிசனம் செய் முருகா!!என்று உருகினார்.நீ எனக்கு காட்சி கொடுக்கும் வரை நான் இங்கு இருந்து விலகுவதில்லை என்று அங்கேயே அமர்ந்து விட்டார். இவ்வாறே நாட்கள் ஓடியது.
குதம்பைநாதரும் முருகன் தனக்காக தன்னுடைய பக்திக்காக ஒரு நாள் காட்சி கொடுப்பார் என்று எதுவும் உண்ணாமல் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறினார்.இப்படியாக ஒரு நாள் கோயில் தூணில் இருந்து கல் ஒன்று விழுந்து அவர் தலையில் ரத்தம் பெருக்கெடுத்தது.
அப்பொழுதும் அவர் மனம் கரையவில்லை.முருகன் வந்தாலே நான் விலகுவேன் என்று பிடிவாதமாக நின்றார். இப்படியாக நாட்கள் கடக்க ஒரு நாள் சிறுபாலகனின் குரல் கேட்கிறது. ‘மகனே! எழுந்து வா!’ என்று.அதற்கு குதம்பைநாதரும் சிறு குழந்ததை போல் என்ன அப்பன் வந்தாலே நான் வருவேன் என்று பிடித்தவாதம் பிடித்து கொண்டு இருந்தார்.
அதற்கு சிரித்தபடியே அந்த பாலகன் வந்திருப்பதே உன் அப்பன் பாலகன் தான்!என்றார். தான் காத்திருந்த நம்பிக்கைக்கு வெளிச்சமாக வந்து நின்ற முருகரை பார்த்த குதம்பைநாதர் மகிழ்ச்சி கண்ணீரில் உறைந்து போனார். ஆக,உண்மையான அன்பிற்கும் பக்திக்கும் இயற்கையும் இறைவனும் எப்பொழுதும் துணை நிற்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |