குழந்தைகள் படிப்பில் நம்பர் 1 ஆக செய்யவேண்டிய பரிகாரம்
குழந்தைகளின் படிப்பு என்பது பெற்றோர்களுக்கு அவ்வளவு முக்கியம்.
அவர்கள் படிப்பில் சிறந்து விளங்க பல கோயில்கள் சென்றாலும் அவர்கள் இன்னும் சிறந்த படிப்பில முன்னேற வரம் தரக் காத்திருக்கிறார் செங்கல்பட்டு முள்ளிப்பாக்கம் பரசுராமேஸ்வரர்.
இவரை தரிசித்தால் படிப்பில் சிறந்து விளங்கலாம் . 'தொண்டை நாடு சான்றோர் உடைத்து' என்பார்கள். சான்றோர் பலர் அவதரித்த புண்ணிய பூமி இது.
முல்லைக் காடான இப்பகுதி முல்லைப்பாக்கம் எனப்பட்டது. தற்போது முள்ளிப்பாக்கம் என்றாகி விட்டது. . ஞானம் பெற விரும்பிய பரசுராமர் இங்குதான் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றார்.
மேலும் முனிவரான ஜமதக்னிக்கும், ரேணுகாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர் பரசுராமர். ராமாயணத்தில் ஸ்ரீராமருக்கும், மகாபாரதத்தில் கர்ணனுக்கும் குருவாக இருந்தவர்.
இவரது பெயரால் சுவாமி 'பரசுராமேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். அம்மன் ஞானாம்பிகை தெற்கு நோக்கி இருக்கிறாள்.
இக்கோயிலில் ஸ்வாமியை புதனன்று காலை 6:00 -7:00 மணிக்குள் புதன் ஹோரையில் சுவாமிக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, வெண் பொங்கலிட்டு வழிபட்டால் கல்வி வளர்ச்சி உண்டாகும்.
ஞாயிறன்று ஞானாம்பிகைக்கு வெள்ளை அரளிப்பூ மாலை சூட்டி தயிர் சாதம் படைத்தால் தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.
இக்கோயிலில் கன்னிமூலை கணபதி, வள்ளி, தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியபகவானுக்கு சன்னதிகள் உள்ளன.
படிப்பில் தங்கள் குழந்தைகள் சிறக்க அவர்கள் முள்ளிப்பாக்கம் பரசுராமேஸ்வரை வழிபட்டு வர மந்தமான குழந்தைகளும் படிப்பில் தேர்ச்சி பெறுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |