நாளைய ராசி பலன் (15-02-2026)
மேஷம்
இன்று பழைய சிக்கலில் இருந்து விடுபடக்கூடிய நாள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை விலகும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.
ரிஷபம்
தந்தை வழியே உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். மனதில் ஒரு விரக்தி நிலைமை உண்டாகலாம். குழந்தைகளிடம் தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
மிதுனம்
பொழுதுபோக்கு விஷயங்களில் குடும்பத்துடன் பங்கு கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் வழியாக உங்களுக்கு ஒரு முக்கிய தகவல் வந்து சேரலாம். சிந்தித்து விவேகமாக செயல்படுவீர்கள்.
கடகம்
இன்று தேவையற்ற விமர்சனங்களை உங்கள் மீது சிலர் வைப்பார்கள். எதிர்காலம் பற்றிய மனதில் அதிக அளவில் கற்பனை உண்டாகும். உங்களுடைய திறமை வெளிப்படுத்துவீர்கள். ஓய்வு எடுக்கக்கூடிய நாள்.
சிம்மம்
வியாபாரத்தில் உறவினர்களுடைய உதவிகளை பெறுவீர்கள். சட்ட ஆலோசனைகளை பெறுவீர்கள். வீடு தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
கன்னி
இன்று பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அன்பு அதிகரிக்கும்.
துலாம்
இன்று உடல் சோர்வு மனசோர்வும் உண்டாகும். எதன் மீதும் ஒரு ஈர்ப்பு இல்லாத ஒரு நிலை பெற்றிருப்பீர்கள். ஞாபக மறதியால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்
உறவினர்களை பற்றிய நல்ல புரிதல் உண்டாகும். தற்பெருமை பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். சிந்தனைகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். செலவுகளை குறைத்தால் நன்மை உண்டாகும்.
தனுசு
புதிய தொழில் தொடங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உணவு துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு மகிழ்ச்சியாக நேரம் செலவு செய்வீர்கள்.
மகரம்
இன்று கணவன் வழி வீட்டார் உடன் இருந்த பிரச்சனைகள் விலகும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். பாராட்டுக்கள் உங்களை வந்து அடையும் நாள்.
கும்பம்
வியாபாரம் செய்யும் இடங்களில் நல்ல லாபம் பெறுவீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு. சமூக தொடர்பான பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். செலவுகள் அறிந்து செயல்படுவீர்கள்.
மீனம்
இன்று உங்களின் புதிய திறமையை நீங்கள் கண்டு கொள்வீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை திட்டமிட்டு செயல்படுவீர்கள். இளைய சகோதரர் வழியாக ஆதாயம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |