13 வகையான லட்சுமி தேவியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நம்முடைய வழிபாட்டில் லட்சுமி தேவியின் வழிபாடு எப்பொழுதும் நமக்கு மன அமைதியும், தைரியமும் கொடுக்கும். அப்படியாக, 13 வகையான லட்சுமி தேவியின் வழிபாடும், அவர்களை வழிபாடு செய்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்ப்போம்.
1. ஸ்ரீதனலட்சுமி - போதும் என்ற மனதோடு அம்பாளை வழிபாடு செய்யும் பொழுது அம்பாள் மனம் குளிர்ந்து நமக்கு அனைத்து விதமான செல்வமும், மகிழ்ச்சியும், மன அமைதியும் கொடுக்கிறாள்.
2. ஸ்ரீவித்யாலட்சுமி - கல்வியில் சிறந்து விளங்க அம்பாளை மனதார வழிபாடு செய்ய, நமக்கு சிறந்த ஞானமும், பேச்சில் நிதானமும் கிடைக்க அம்பாள் அருள் புரிகிறாள்.
3. ஸ்ரீதான்யலட்சுமி - பிறருக்கு நல்ல மனதோடு தானம் செய்து, பிறர் பசியை போக்குபவர்களுக்கு அம்பாள் அனைத்து அருளையும் வழங்குகிறாள்.
4. ஸ்ரீவரலட்சுமி - பிறரால் துன்பமும், மன வேதனையும் அடையும் பொழுது மன தைரியம் கிடைத்து போராடும் அருளை அம்பாள் வழங்குகிறாள். இவளை வழிபாடு செய்ய எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும்.
5. ஸ்ரீசௌபாக்யலட்சுமி - பிறர் நம்மை மனம் நொந்துகொள்ளும்படி பேசினாலும், நாம் அவர்களை அன்பால் அரவணைத்து கொண்டும் போகும் பக்குவம் இருந்தால், அம்பாள் நம்மை தேடி வந்து சகல சௌபாக்கியங்கள் கொடுத்து அருளிச்செய்கிறாள்.
6. ஸ்ரீசந்தானலட்சுமி - மனதில் எந்த ஒரு கோபம், வஞ்சகம் இல்லாமல் அம்பாளை வழிபாடு செய்யும் பொழுது அம்பாள் நமக்கு முக பொலிவும், செல்வமும் அருளிச்செய்கிறாள்.
7. ஸ்ரீகாருண்யலட்சுமி - ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் ஸ்ரீகாருண்யலட்சுமியின் அருளைப் பெறலாம்.
8. ஸ்ரீமகாலட்சுமி - பிறருக்கு உதவும் எண்ணமும், பிறர் துன்பத்தை தங்கள் துன்பம் என்று கருதி மனம் வருந்தும் நல்ல எண்ணம் கொண்டவர்களிடம் மஹாலக்ஷ்மி தாயார் குடிகொள்கிறாள். அவர்களுக்கு துன்பம் வராமல் அம்பாள் பார்த்து கொள்கிறாள்.
9. ஸ்ரீசக்திலட்சுமி - எந்த சூழ்நிலையிலும் கடமை தவறாது நேர்மையுடன் செயல்பட்டு, மன வலிமை கொண்டவர்களை அம்பாள் தேடி வந்து அருள் புரிகிறாள். அவர்களுக்கு அம்பாளின் ஆசீர்வாதம் எப்பொழுதும் இருக்கும். மேலும், துன்பப்படும் வேளையில் இவளை மனதில் நினைத்து கொண்டாலே தைரியம் தானாக பிறக்கும்.
10. ஸ்ரீசாந்தலட்சுமி - சிலருக்கு பிறர் செய்த துரோகத்தினை தாங்கி கொள்ள முடியாமல் அவர்களின் மனம் கோபத்தால் சூழ்ந்து இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு மன அமைதியும், சாந்தமும் அவசியம் தேவை படும். அப்படியானவர்கள் கட்டாயம் சாந்த லட்சுமியை வழிபாடு செய்தால் மனம் சாந்தம் பெற்று கோபம் தணியும்.
11. ஸ்ரீசாயாலட்சுமி - பலனை எதிர்பாராமல் ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.
12. ஸ்ரீவிஜயலட்சுமி - செய்யும் தொழிலில் வெற்றியும், வேலையில் சிறந்து விளங்க விஜயலக்ஷ்மி வழிபாடு மிக சிறந்த பலன் கொடுக்கும்.
13. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி - மனிதர்களின் உடல் நிலை பெரும்பாலும் கோபம், வருத்தம் இவைகளினால் மிகவும் பாதிப்படையும். அப்படியான நேரத்தில் ஆரோக்கிய லக்ஷ்மியை வழிபாடு செய்வது அவர்களுக்கு அம்பாளின் அருளால் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |