இந்த 2 ராசியில் பிறந்த ஆண் காதலனாக கிடைப்பவர்கள் கொடுத்து வைத்தவர்களாம்
மனிதனுக்கு காதல் என்பது கட்டாயம் தேவைப்படக் கூடிய ஒரு அன்பாக இருக்கிறது. காதல் இல்லாத வாழ்க்கை கசப்பானது தான். அப்படியாக ஒவ்வொரு ராசி ரீதியாக ஒவ்வொருவரும் தங்களுடைய காதலை வெவ்வேறு வடிவில் வெளிப்படுத்துவார்கள்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில மூன்று ராசியில் பிறந்து ஆண்கள் ஒரு பெண்ணிற்கு காதலனாக கிடைத்துவிட்டால் அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவள் என்று சொல்கிறார்கள். அப்படியாக எந்த 2 ராசியில் பிறந்த ஆண்கள் காதல் மன்னன் என்று பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் எப்பொழுதும் சமநிலையை விரும்புவார்கள். எப்பொழுதும் கலகலப்பாக தங்களுடைய சூழலை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் காதலனாக கிடைத்தால் அந்தப் பெண் மிகவும் கொடுத்து வைத்தவள். காரணம் அந்த ஆண் அவனுடைய முழு நேரத்தையும் அன்பையும் இந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே கொடுக்கக் கூடியவராக இருப்பார். அந்த பெண்ணை மகாராணி போல் பார்த்துக் கொள்வதில் துலாம் ராசி ஆண்கள் சிறப்பு வாய்ந்தவர்கள்.
மீனம்:
மீன ராசி ஆண்கள் தங்களின் துணையை எப்பொழுதும் சரி சமமாக நடத்த வேண்டும் என்று நினைப்பார்கள். தங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு ஒரு தனி இடமும் மதிப்பும் எப்பொழுதும் கொடுத்து தங்களின் துணையை அவர்கள் பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும் என்று நினைப்பது உண்டு. மேலும் காதல் மற்றும் திருமணம் என்று வந்து விட்டால் தங்களின் துணை பேச்சை கேட்டு நடக்கக்கூடியநபராக இருப்பார்கள். தன் துணையின் பேச்சை மீறி அவர்கள் எந்த ஒரு காரியமும் செய்யமாட்டார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







