பள்ளியறையில் தாயுடன் இருக்கும் விநாயகர்- எங்கு தெரியுமா?
புதுச்சேரி நகரின் மையப் பகுதியில் கடற்கரைக்கு மிக அருகில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கோயில் மணல் குளத்து விநாயகர் என்ற பெயரால் அழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி மணக்குள விநாயகர் என்று நினைத்தது "மணல்" மற்றும் "குளம்" ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களைக் குறிக்கும்.
பெயருக்கு ஏற்றவாறு கோயில் இருந்த இடத்தில் மணல் நிரம்பிய ஒரு குளம் இருந்ததாக கூறப்படுகிறது. இப்போது இந்த மணக்குள விநாயகர் கோயிலின் வரலாற்றினையும் சிறப்புகளையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வரலாறும் பெயர் காரணமும்:
மணக்குள விநாயகர் கோயில் கிபி 166 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பழமையை கொண்டது.
மணல்+குளம்:
இக்கோயில் அமைந்திருந்த இடமானது கடற்கரையை ஒட்டிய மணல் நிறைந்த குளம் அல்லது நீரூற்றுடன் கூடிய கிணற்றின் அருகே இருந்ததாலேயே இப்பெயர் வந்தது. இன்று அந்த குளம் இல்லையென்றாலும் மூலவருக்கு அருகே சிறிய அளவில் உள்ள வற்றாத நீர் ஊற்று அதன் அடையாளமாக கருதப்படுகிறது.
புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது இந்த கோயிலை இடிக்க பிரெஞ்சு தூதர்கள் பலமுறை முயன்றனர். சிலையை அகற்றி கடலில் வீசி எறிந்த போதெல்லாம் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் வந்து கரையறியதாக கதை உள்ளது. இதனால் விநாயகரின் பெருமை உணர்ந்த பிரெஞ்சுக்காரர்கள் இவரை வழிபட தொடங்கினர். இதன் காரணமாகவே இவருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது.

கோயிலின் தனி சிறப்புகள்:
மணக்குள விநாயகர் ஆலயம் மற்ற விநாயகர் கோயில்களில் இருந்து மாறுபட்ட பல தனி சிறப்புகளைக் கொண்டுள்ளது. தங்க விமான கோபுரம்: இந்தியாவிலேயே விநாயகருக்கு மூலஸ்தான கோபுரம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டிருக்கும் ஒரே கோயில் இதுவே. இந்த கோபுரம் சுமார் 7913 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
மூலவரும் கருவறை அமைப்பும்:
இத்தலத்து விநாயகர் இடம்புரி விநாயகர் ஆவார். இவர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
கிணற்றின் மீது அமர்ந்த மூலவர்:
மூலவர் மணக்குள விநாயகர் அமர்ந்திருக்கும் இடமே ஒரு கிணறு அல்லது ஆழமான குளமாகும். மூலவருக்கு அருகிலேயே உள்ள ஆழமான குழியில் வற்றாத நீரூற்று இன்றும் காணப்படுகிறது.
ஸ்ரீதேவி பூதேவியுடன்:
பொதுவாக பிரம்மசாரியாக கருதப்படும் விநாயகர் இங்கு தனது மனைவிகளான சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிக்கிறார்.
பள்ளியறை மற்றும் திருக்கல்யாணம்:
விநாயகர் தலங்களில் வேறெங்கும் காணப்படாத சிறப்பாக இங்கு பள்ளியறை உள்ளது. தினமும் இரவு நைவேத்தியம் முடிந்தவுடன், விநாயகர் தனது தாயார் சக்தி தேவியாருடன் பள்ளியறைக்கு செல்வதாக நம்பப்படுகிறது. மேலும் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கும் ஒரு சில கோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.

தொல்லைக் காது சித்தர் தொடர்பு:
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்லைகாது சித்தர் சுவாமிகள் மணக்குள விநாயகரால் கவரப்பட்டு, தினம் இவரை தரிசித்து வந்தார். அவர் விரும்பிய படி அவர் சமாதி அடைந்த பிறகு கோயிலுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார். இன்றும் அவர் விநாயகரை தரிசிப்பதாக ஐதீகம்.
மகாகவி பாரதியார் பாடிய திருத்தலம்:
புதுச்சேரியில் 1908 முதல் 1918 வரை தங்கி இருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இந்த மணக்குள விநாயகரை போற்றி “நான்மணி மாலை” என்ற தலைப்பில் 40 பாடல்களை பாடியுள்ளார். இந்த தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விஷயம் இதுவாகும்.
கட்டிடக்கலை மற்றும் அமைப்பு:
தங்கரதம்: இக்கோவிலுக்கு தங்கரதம் ஒன்று உள்ளது. 10 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்ட இந்த தங்கத்தை 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, பிரமோற்சவத்தின் போது பவனி வருவது வழக்கம்.
ஓவியங்கள்:
கோயிலின் சுற்றுச்சூழல் மற்றும் மேற்கூரைகளில் விநாயகர் பற்றிய பல வண்ணச் சுதை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் 27 நட்சத்திர அதிபதிகளின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. தங்க கவசம்: இங்கிருக்கும் விநாயகருக்கு 5 கிலோ எடை உள்ள 916 தரத்திலான தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாடு மற்றும் திருவிழாக்கள்:
இக்கோயில் கானாபத்திய ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்: பிரமோற்சவம்: ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் 24 அல்லது 25 நாட்கள் பிரமோற்சவம் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி:
விநாயகரின் பிறந்த நாளான ஆவணி மாதத்தில் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக அனுசரிக்கப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி:
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று 4 கால அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. திருமண வரம் குழந்தை வரம் உள்ளிட்ட அனைத்து விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மனக்குள விநாயகர் கோயில் புதுச்சேரியின் கலாச்சார மற்றும் ஆன்மீக சின்னமாக திகழ்வதுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் ஒரு முக்கிய தலமாகவும் விளங்குகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |