மந்திரங்கள் சொல்லும் முறை என்ன?
மந்திரங்களை நாம் எப்படி சொல்ல வேண்டும்?அதாவது ஒரு மந்திரத்தை சுவாமியே நினைத்து எப்படி உச்சரித்து நம் மனதார வழிபட வேண்டும் என்று நிறைய சந்தேகங்கள் இருக்கும் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நாம் ஒரு மந்திரத்தை சொல்லும்பொழுதும் நினைக்கும் பொழுதும் அது நமக்கு மட்டுமே கேட்கும் படியாக இருக்க வேண்டும். பிறருக்கு கேட்கும்படியாக நம் மந்திரத்தை பாராயணம் செய்யக் கூடாது.
மந்திரமானது மிக சக்திகள் நிறைந்தது. அப்படி ஒரு மந்திரத்தை நாம் சொல்லும் பொழுது நம் மனதிற்கும் நம்முடைய செவிகளுக்கு மட்டுமே கேட்குமாறு அந்த மந்திரத்தை நம்மோடு நம்முள் கலந்தபடி சொல்ல வேண்டும்.
மேலும் ஒருவர் மந்திரத்தை சொல்வதனால் அவர்களுக்கு பல கோடி புண்ணியம் வந்து சேர்கிறது. ஒரு மந்திரம் அவர்கள் பாராயணம் செய்வதால் பல பாவங்கள் தீர்கிறது பல ஜென்மத்து புண்ணியங்கள் கிடைக்கிறது.
ஆதலால் நமக்கு நேரம் கிடைக்கும் பொழுதும் நம்முடைய இறை வழிபாட்டில் மனதை செலுத்தும் பொழுதும் மந்திரத்தோடு சேர்த்து இறைவனை நாம் வழிபாடு செய்யும் பொழுது அனைத்து விதமான நற்பலன்களும் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |