நந்தி தேவருக்கு முதல் வழிபாடு ஏன்?
வேத கோஷங்கள் ஒலிக்க சிவபெருமான் பார்வதி தேவியுடன் கைலாயத்தில் வீற்றிருந்தார் அப்பொழுது வீணையை மீட்டுக் கொண்டு வந்த நாரதர் சிவபெருமானை வணங்கி பெருமானே பூலோகத்தில் மக்கள் அறியாமையால் துன்புறுகின்றனர்.
அறியாமை இருளால் தங்கள் திருநாமத்தை கூட மறந்து விட்டார்கள்.தர்மம் மீறிய செயல்கள் செய்து வருகின்றனர். தான் என்னும் ஆணவம் அனைவரிடத்தில் மேலோங்கி நிற்கிறது.
ஆதலால் அவர்களுக்கு தக்க பாடம் கற்பித்தும் அவர்களின் அறியாமையை தாங்கள் போக்க வேண்டும் என வேண்டினார் நாரதர்.
கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் நான் பூலோகம் சென்று தர்மத்தை காக்கிறேன் என கூறினார். மேலும் நான் வரும்வரை நந்திதேவன் எனது இடத்தில் இருப்பான்.
நந்தி தேவன் பக்தியில் என்னை போன்றவர். ஆதியில் அவதரித்தவன் நானே நந்தி தேவன். தர்மமே வடிவானவன் சிவாய நம மந்திரத்தின் உருவகம் நந்தி தேவனே எப்போதும் என்னை சுமந்து நிற்கும் நந்தி தேவன் எனக்கு ஈடாக திகழ்பவன்.
எனவே நந்தி தேவரை வழிபாடு செய்பவருக்கு சிறந்த பக்தியும் நல்ல குழந்தை செல்வங்களும் சகல காரிய சித்தியும் உயர்ந்த பதவிகளும் நல்ல எண்ணங்கள் நல்லொழுக்கங்கள் கிடைக்கும்.
இவற்றுக்கு மேலாக முக்திகளும் வீடு பெயரையும் அடைவது என விளக்கினார்கள் சிவபெருமான் தனக்கு நிகராக நந்தி தேவரை விளக்கியுள்ளதால் ஒவ்வொரு பிரதோஷ வேளையிலும் நந்தி தேவரை வழிபட்டு போற்ற வேண்டும் என்கிறது புராணம்.
மேலும் நாம் கோயிலுக்கு சென்றால் மறக்காமல் நந்தி தேவனை வழிபட்டு அருள் பெற்று வர வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |