இன்றைய ராசி பலன்(22.12.2024)

Report

மேஷம்:

பிரிந்து சென்ற உறவுகள் உங்களை தேடி வருவார்கள்.யோகமான நாள்.பல நாள் வாங்கவேண்டும் என்று திட்டமிட்ட பொருட்களை வாங்குவீர்கள்.குடும்பமாக சுற்றுலா பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்:

எதிர்ப்பாராத நேரத்தில் எதிர்பாரா நண்பர்களை சந்திப்பீர்கள்.ஆதாயமான நாள்.வியாபாரத்தில் உங்களுக்கான பங்கு சரியான முறையில் கிடைக்கும்.இறை வழிபாட்டால் மனம் அமைதி பெரும்.

மிதுனம்:

உங்கள் முழு முயற்சியால் நினைத்தை சாதிப்பீர்கள்.எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.வீட்டில் உண்டான பிரச்னைகள் படிப்படியாக குறையும்.வேலை பளு அதிகரிக்கும்.வெற்றி பெரும் நாள்.

கடகம்:

கண் சம்பந்தமான பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.மனைவி உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.வேலைக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும்.

சிம்மம்:

உங்கள் மனம் தெளிவாகும். வரவேண்டிய பணம் வரும். தேவைகள் பூர்த்தியாகும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இறங்க வேண்டாம்.

கவலைகள் தீர காமாட்சி அம்மன் மந்திரம்.., மார்கழி வெள்ளிக்கிழமையில் சொல்லுங்கள்

கவலைகள் தீர காமாட்சி அம்மன் மந்திரம்.., மார்கழி வெள்ளிக்கிழமையில் சொல்லுங்கள்

கன்னி:

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கன்டுகொள்வீர்கள்.உங்களுக்கான மதிப்பு உயரும்.படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள்.வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான உதவிகள் கிடைக்கும்.

துலாம்:

மனம் தேவை இல்லாத விஷயத்தை எண்ணி குழப்பம் அடையும்.இறைநாட்டம் அதிகரிக்கும்.வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்டு கொள்வீர்கள்.அமைதி காக்க வேண்டியநாள்.

விருச்சிகம்:

பொருளாதார நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி நிறைவேறி அனுகூலம் உண்டாகும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.நேற்றைய பிரச்னை விலகும். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும்.

தனுசு:

கணவன் மனைவி இடையே பிரச்சனை வரும்.மனதில் இனம் புரியாத கவலைகள் ஏற்படும்.பெற்றோர் வழியில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.உறவினர்கள் வ்ருகையால் நன்மை பெரும் நாள்.

மகரம்:

இயந்திரப் பணியில் ஈடுபடுவோர் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். செயல்கள், வாகனப் பயணத்தில் கவனம் தேவை.மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையோ இழந்தது போன்ற எண்ணம் ஏற்படும்.

கும்பம்:

கூட்டுத் தொழிலில் தோன்றிய பிரச்னை முடிவிற்கு வரும். நண்பர்கள் இன்று உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு நீங்கும்.

மீனம்:

மறைமுக எதிரிகள் உங்களை விட்டு விலகுவர்.பிள்ளைகள் பற்றி புரிந்து கொள்வீர்கள்.செய்த தவறை நினைத்து வருத்தம் அடையும் நாள்.உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகும்.ஆதாயமான நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US