வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டும் மார்கழி வெள்ளிக்கிழமை வழிபாடு
மனிதனுக்கு மன அமைதி என்பது மிகவும் அவசியமான ஒன்று.மன அமைதி இருந்தால் தான் அன்றாட வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியும்.ஆனால் சிலர் வீட்டில் என்ன காரியம் செய்தாலும் தடங்கல்,நஷ்டம்,மகிழ்ச்சியின்மை போன்ற விஷயங்கள் மாறி மாறி நடந்து கொண்டு இருக்கும்.
இதனால் வீட்டில் உள்ள நபர்களுக்கு ஒருவித பயம் உருவாகி விடும்.அதாவது அவர்கள் வசிக்கும் வீட்டை ஏதேனும் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து இருக்குமோ?அல்லது தீய சக்திகள் தாக்கம் உண்டாகி இருக்குமோ என்ற அச்சம் அவர்களை சொந்த வீடாக இருந்தாலும் காலி செய்து வேற இடத்திற்கு குடியேறலாமா என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கும்.
அப்படியானவர்கள் பயம் கொள்ளாமல் வழிபாட்டிற்கே உரிய மார்கழி மாதத்தில் செய்யவேண்டிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம். பொதுவாக மிகுந்த கவலையான சூழலில் அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் மனதில் ஒருவித நிம்மதி பிறப்பதை பார்க்க முடியும்.
அப்படியாக மார்கழி வெள்ளிக்கிழமை அன்று அருகில் இருக்கும் அம்மன் ஆலயம்,அல்லது உங்களுக்கு பிடித்த அம்மன் ஆலயத்திற்கு செல்லவேண்டும்.அவ்வாறு செல்லும் பொழுது கடையிலிருந்துபுதிதாக மஞ்சள் தூள் வாங்க வேண்டும்.
வீட்டில் இருந்து மஞ்சள் எடுத்து செல்ல கூடாது.மேலும்,வாங்கி சென்ற மஞ்சளை அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து கொள்ள வேண்டும்.பிறகு அந்த மஞ்சளை வீட்டிற்கு எடுத்து வந்து நிலை வாசல் நான்கு பக்கமும் பூச வேண்டும்.குறிப்பாக மஞ்சளை பூசும் பொழுது ‘ஓம் சக்தி ஓம் சக்தி’ என்று சொல்லிக் கொண்டே மஞ்சள் பூசி நிலை வாசலை வணங்குங்கள்.
இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பழைய மஞ்சள் துடைத்து விட்டு புது மஞ்சள் பூசி குங்குமம் வைக்க வேண்டும்.பிறகு அந்த மஞ்சளால் நிலைவாசல் வாசல் கதவில் “ஓம்” என்ற வார்த்தையை எழுதி வைத்து விடுங்கள்.
இதை செய்து நிலை வாசல் படியில் இரண்டு விளக்குகளை ஏற்றி வைத்தாலே போதும். வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்பவர்கள் வீட்டிற்குள் எந்தவிதமான கெட்ட சக்தியும், நுழையாது.பிறகு முடிந்த வரை வார வாரம் வெள்ளிக்கிழமை மறக்காமல் சாம்பிராணி தூபம் போடுங்கள்.
நேரம் கிடைக்கும் பொழுது ஓம் சக்தி பராசக்தி என்று சொல்லுங்கள்.நேரம் கிடைக்காவிட்டாலும் நேரம் ஓதுக்கி குடும்பமாக வெள்ளிக்கிழமை அம்மன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்யுங்கள்.இவ்வாறு செய்ய நிச்சயம் 48 நாளில் உங்கள் வீட்டில் நடக்கும் மாற்றத்தை கண் எதிரே பார்க்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |