தேக அழகும் திருமண பாக்கியமும் அருளும் தேக சௌந்தரி பூமிநாதன் கோயில் (கோனேரிராஜபுரம்)
மயிலாடுதுறை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் போகும் சாலையில் கோனேரிராஜபுரம் என்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு திருநல்லம் என்ற இடத்தில் பூமினேஸ்வரர் / பூமிநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் சுவாமிகளால் பாடப்பட்ட காவிரி தென்கரையில் உள்ள 34 ஆவது திருத்தலம் ஆகும்.
இக்கோவிலை தேவர்களின் விஸ்வகர்மாவான மயன். வைகாசி மாதத்தில் ரோகினி நட்சத்திரமும் பஞ்சமி திதியும் வியாழக்கிழமையும் கூடிய ஓர் நன்னாளில் பிரதிஷ்டை செய்ததாக ஸ்தல புராணம் கூறுகின்றது. முகப்பு மண்டபத்தின் விதானத்தில் சோழர் கால ஓவியங்கள் உள்ளன.ஆனையுரி தேவர் லிங்க பூஜை செய்யும் ஓவியம் காணப்படுகின்றது.
சாமியும் அம்மனும்
கோனேரிராஜபுரம் பூமிநாதர் கோவிலின் இறைவன் பூமினேஸ்வரன் என்றும் உமா மகேஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். அம்மனின் பெயர் தேக சௌந்தரி அல்லது அங்க வள நாயகி.
அங்கங்கள் வளமையாகவும் செழிப்பாகவும் இருக்கும் தேவி என்பதனால் அங்க வளநாயகி , தேக சௌந்தரி, உடல் அழகு படைத்தவள் என்று அம்மன் அழைக்கப்படுகின்றார். பெண்கள் தங்களின் தேக அழகுக்கும் உடல் வசீகரத்துக்கும் தேவியைத் தொடர்ந்து வணங்கி வரலாம்.
உப சந்நிதிகள்
கருவறைக்கு வலப்பக்கத்தில் விநாயகரும் இடப்பக்கத்தில் சுப்பிரமணியருக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு. மிகப் பெரிய சுயம்பு நடராஜர் தனிச் சந்நிதியில் உள்ளார். இங்கு நவக்கிரக சந்நிதி, சண்டிகேச்வரர்கள் சந்நிதி, சனி பகவாக்னுக்கு தனி சந்நிதி ஆகியன உண்டு. நந்தி மட்டும் கிடையாது. திரிபுர சம்ஹார மூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது
சிறப்பம்சங்கள்
கோனேரிராஜபுரம் பூமிநாதர் கோவிலின் தலவிருட்சம் அரச மரம் ஆகும். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் எனப்படும். இங்கே மூன்று சண்டிகேஸ்வரர்கள், 3 லிங்கங்கள், ஆறு விநாயகர், ஒன்பது கோஷ்டம் என்று எல்லாமே பலவாகிய எண்ணிக்கையில் உள்ளது.இந்த எண்ணிக்கை இக்கோவிலின் தனிப் பெரும் சிறப்பாகும்.
திருநல்லம் பூமினேஸ்வரர்
கோவிலின் விமானம் அஷ்ட துவார பாலக விமானம் ஆகும். பூமினேஸ்வரர் அஷ்டதிக் பாலர்கள் வணங்கிய சிவபெருமான் என்பதால் விமானத்தில் எட்டு திசைகளிலும் அஷ்டதிக் பாலகர்கள் இடம் பெற்றுள்ளனர்.
எமன் வழிபட்ட துர்க்கை
பூமிநாதர் கோயிலில் உள்ள துர்க்கை எம் பயம் போக்கும் துர்க்கை ஆவாள். இவளை வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சங்கனி மாலை சாத்தி வழிபடுபவருக்கு எம பயம் நீங்கும். எனவே கணவனுக்கு ஆயுள் தோஷம் உள்ளவர்கள் தனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி கணவனுக்கு தீர்க்காயுள் பெறலாம்.
கோவில் வரலாறு
பௌத்த கோவில் இருந்த இடத்தை சிவன் கோவிலாக மாற்றிய போது ராஜராஜ சோழனின் தாத்தா கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி சிவனுக்கு கல்லால் கோவில் கட்டிக் கொடுத்தார். இதனை. கற்றளி என்பர்.
இவ்வாறு ஐந்து இடங்களில் செம்பியன் மாதேவி சிவபெருமானுக்கு கற்றளிக் கோவில்களை கட்டிக் கொடுத்தார்.அவற்றில் ஒன்று திருநல்லம் பூமினேஸ்வரர் கோவில் ஆகும். இதற்கான கல்வெட்டுச் சான்று திருமதில் சுவரில்உள்ளது.
கல்யாணத் திருத்தலம்
திருநல்லம் கோவிலில் எழுந்தருளியிருக்கும் பூமினேஸ்வரர் மேற்கு நோக்கி லிங்க ரூபத்தில் காட்சி தருகின்றார். கிழக்கு நோக்கி நிற்கும் அம்பாள் இவருக்கு நேர் எதிரில் தேக சௌந்தர்யாக விளங்குகின்றாள். இருவருக்கும் இடையில் நந்தி கிடையாது.
இவர்கள் இருவரும் மணமக்கள் போல ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்கின்றனர். எனவே இது கல்யாணத் திருத்தலம் ஆகும். இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும் மாப்பிள்ளை சாமி என்றும் அழைக்கப்படுகின்றார்.
அகத்தியர் இறைவனின் திருமணக் காட்சியை கண்டு அருள் பெற்ற திருத்தலம் ஆகும். திருவேள்விக்குடியில் திருமண வேள்வி நடந்தது என்றும் திருமணஞ்சேரியில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள் என்றும் திருநல்லத்தில் திருமணம் முடித்தார்கள் என்றும் இப்பகுதி வாழ் பெரியவர்கள் கூறுகின்றனர். இவர்களின் திருமணம் பற்றிய ஸ்தலபுராணக் கதையும் உள்ளது.
கல்யாணத் திருத்தலம்
திருநல்லம் கோவிலில் எழுந்தருளியிருக்கும் பூமினேஸ்வரர் மேற்கு நோக்கி லிங்க ரூபத்தில் காட்சி தருகின்றார். கிழக்கு நோக்கி நிற்கும் அம்பாள் இவருக்கு நேர் எதிரில் தேக சௌந்தர்யாக விளங்குகின்றாள். இருவருக்கும் இடையில் நந்தி கிடையாது.
இவர்கள் இருவரும் மணமக்கள் போல ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்கின்றனர். எனவே இது கல்யாணத் திருத்தலம் ஆகும். இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும் மாப்பிள்ளை சாமி என்றும் அழைக்கப்படுகின்றார்.
அகத்தியர் இறைவனின் திருமணக் காட்சியை கண்டு அருள் பெற்ற திருத்தலம் ஆகும். திருவேள்விக்குடியில் திருமண வேள்வி நடந்தது என்றும் திருமணஞ்சேரியில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள் என்றும் திருநல்லத்தில் திருமணம் முடித்தார்கள் என்றும் இப்பகுதி வாழ் பெரியவர்கள் கூறுகின்றனர். இவர்களின் திருமணம் பற்றிய ஸ்தலபுராணக் கதையும் உள்ளது.
விநாயகர் சபை
திரு நல்லம் பூமிநாதர் கோயில் ஆதியில் பௌத்தக் கோவிலாக இருந்ததால் இங்குப் போதி மரம் என்ற அரசமரம் ஸ்தலவிருட்சமாக உள்ளது. இவ்விடம் ஆதியில் அரச வனமாக இருந்தது. பௌத்தர்களின் வழிபடு தெய்வமாக இருந்து வந்த யானை முகக் கடவுள் மூத்த விநாயகர் என்றும் இங்கு அரசமர விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவரே சிவனின் கருவறைக்கு வலப்பக்கத்தில் சாந்நித்யம் செய்கிறார். மேலும் இக்கோவிலில் ஆறு விநாயகர்கள் ஒரே இடத்தில் இருக்கும் விநாயகர் சபை உள்ளது. இச்சிறப்பு வேறு எந்த கோவிலுக்கும் இல்லை.
சனி பகவான் சந்நிதி
சனி பகவான் இக்கோவிலில் மேற்கு நோக்கி வெள்ளை ஆடை உடுத்தி காட்சி தருகின்றார். நள மகாராஜன் திருநள்ளாறு சனியை வணங்கி சனி தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு முன்பதாக இந்தக் கோயிலுக்கு வந்து சனிபகவானை வழிபட்டு சென்றதாக ஐதீகம்.
இங்கு சனி பகவான் வெள்ளை ஆடை உடுத்தி அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகின்றார். மற்ற கோவில்களில் சனிக்கு கருப்பு ஆடை உடுத்துவார்கள். இங்கு வெள்ளை எள்ளைத் துணியில் முடிந்து எண்ணெயில் இட்டு விளக்கு ஏற்றுகின்றனர்.
ஞானக் குழம்பு தீர்த்தம்
திரு நல்லம் பூமி நாதர் கோவிலுக்கு வந்து ஞானக் குழம்பு தீர்த்தம் வாங்கிக் குடிக்கும் மாணவ மாணவியர்கள் கல்வியில் உயர்ந்த நிலை அடைவார்கள். பிரம்ம தீர்த்தத்தில் குளித்து இறைவனை வணங்கி வருவோர் அறியாமை இருள் நீங்கி அறிவொளி பெறுவர்.
கதை 1
மாப்பிள்ளை சாமி
கதை அகத்தியரும் மற்ற முனிவர்களும் கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானிடம் அவருடைய திருமணக் கோலத்தைக் காண வேண்டும் என்று தங்களுடைய ஆவலை வெளிப்படுத்தினர். இறைவன் திருநல்லத்தில் வந்து என் திருமணக் கோலத்தை காணுங்கள் என்றார்.முனிவர்கள் இத்திருத்தலத்துக்கு வந்து இறைவனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்தனர்
கதை 2
நடராஜ மூர்த்தி
கதை சோழ மன்னன் புரூரவச் சக்கரவர்த்தி நடராஜமூர்த்திக்கு மிகப்பெரிய செப்புத் திருமேனி செய்ய வேண்டும் என்று ஆணையிட்டான்.
செப்புத் திருமேனி செயபவன் பலமுறை அச்சுரு செய்தும் அது சரி வராத காரணத்தினால் மிகுந்த வருத்தத்தோடு இருந்தான். அந்த வேளையில் சிவபெருமான் காட்டு வேடனாகவும் பார்வதி வேட்டுவச்சியாகவும் முருகப்பெருமானைக் குழந்தையாக இடுப்பில் சுமந்து கொண்டு நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக அழைத்துக் கொண்டு வந்தனர்.
வீடு வீடாக நின்று குடிக்க தண்ணீர் கேட்டனர். யாரும் இவர்களுக்கு தண்ணீர் தர முன் வரவில்லை. பட்டறைக்கு வந்தவர்கள் அங்கிருந்த கொல்லனிடம் தண்ணீர் கேட்டனர். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த காரணத்தினால் கொல்லனும் சலிப்புடன் 'பட்டறையில் ஏதய்யா தண்ணீர்? வேண்டுமானால் கொதித்துக் கொண்டே இருக்கும் இந்த செம்புக் குழம்பை எடுத்து குடிசுக்கோ' என்றான் சரி என்று அவர்கள் சூடாக இருந்த செம்புக் குழம்பைக் குடித்தனர்.
குடித்ததும் நடராஜரும் சிவகாமியுமாக உருமாறி விட்டனர். எனவே இங்கே உள்ள நடராஜமூர்த்தியை சுயம்பு நடராஜர் என்று அழைக்கின்றனர். இச்சிலை மனிதனால் செதுக்கப்பட்ட நடராஜர் அல்ல. இறைவனே நடராஜனாக உருவெடுத்து நின்ற திருமேனியாகும்.
இந்த நடராஜர் சிற்பத்தில் நகம் ரோமம் மச்சம் மறு ஆகிய அனைத்தும் அந்த மனிதனிடமிருந்தது போலவே சிலையிலும் காணப்படுகின்றது. அழகிய நடராஜமூர்த்தியைப் பார்த்த மன்னன் புரூரவச் சக்கரவர்த்தி எப்படி இத்திருமேனியை இவ்வளவு அழகாக வடிவமைத்தாய் என்று கேட்டார்.
அதற்கு அவன் நடந்ததைக் கூறினான். மன்னனால் நம்ப இயலவில்லை. உண்மையிலேயே இது திருமேனி தானா அல்லது வேறு ஏதேனும் மாய மந்திரம் இதில் இருக்கின்றதா என்று கேட்டபடி தன் வாளால் நடராஜமூர்த்தியின் காலைத் தட்டினார்.
காலில் இருந்து ரத்தம் பீறிட்டது. ரத்தக் காயத்தைப் பார்த்ததும் மன்னன் அதிர்ந்து போனான். அத் தருணத்திலேயே அவன் உடம்பில் குஷ்ட நோய் பரவத் தொடங்கியது.
சிவபெருமானைச் சந்தேகப்பட்டதற்காக மன்னன் இறைவனிடம் தன் த்வரைப் பொறுத்தருளும்படி நெக்குருகி வேண்டினான். இறைவன் 48 நாட்கள் அங்கே தங்கி இருந்து பிரம்ம தீர்த்தத்தில் குளித்துத் தன்னை வணங்கி வருமாறு ஆணையிட்டார்.
அவ்வாறு 48 நாட்கள் ஒரு மண்டலம் பூஜை செய்து வணங்கி வந்த பின்பு புரூரவச்சக்கரவர்த்திக்கு நோய் விலகியது. நோய் வில்கியதும் மன்னன் மனம் குளிர்ந்து கோவில் விமானத்துக்கு பொன் வேய்ந்தான்.கோயில் நிர்மாணிக்கப்பட்ட வைகாசி விசாகத் திருநாள் அன்று பொன் வேய்ந்தான். விமானத்துக்குத் தங்கத் தகடுகள் பதித்தான்.
வைகாசி விசாகம்
திருநல்லம் பூமிநாதர் கோயிலில் வைகாசி விசாகத்து அன்று பல சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வைகாசி விசாகம் என்பது பௌத்தர்களின் புத்த பூர்ணிமா (வைசாக்) என்று அழைக்கப்படும் கௌதம புத்தரின் பிறந்த நாளாகும்.
திரு நல்லம் கோயில் புத்தர் கோயிலாக இருந்த காலத்தில் இருந்தே வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது மயண் இச்சிவன் கோயிலை வைகாசியில் நிர்மானித்ததால் தற்போதும் இது திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
கதை 3
உமா மகேஸ்வரன் கதை
ஒருமுறை கௌதம முனிவர் தலைமையில் 3000 முனிவர்கள் திருக் கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானைக் வணங்கினர். தங்களுக்கு ஐயனின் ஆனந்தத் தாண்டவக் காட்சியைக் காட்டி அருளும்படி வேண்டிக் கொண்டனர்.
அவர் 'நீங்கள் அனைவரும் பூலோகத்தில் உள்ள அரசவனத்திற்குப் போய்த் தவம் செய்யுங்கள். அங்கு உங்களுக்கு நான் ஆனந்த தாண்டவம் அருள்கிறேன்' என்றார். முனிவர்கள் அனைவரும் இங்கு வந்து கௌதம முனிவரின் வழிகாட்டுதலின்படி இத்திருத்தலத்தில் இருந்த அரசவனத்தில் தவம் இருந்தனர்.
இவர்களின் கடும் தவத்தை மெச்சிய சிவபெருமான் ஒருநாள் இவர்களுக்கு ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாகக் காட்சியளித்தார். எனவே இக்கோவிலில் மிகப்பெரிய நடராசமூர்த்தி சிலை உள்ளது. . இக்கதையின் மூலத்தை ஆராய்ந்தால் இங்குக் கௌதம புத்தரின் துறவிகள் ஏராளமானோர் போதி (அரச) மரங்கள் அடர்ந்த அரசவனத்தில் மடாலயம் அமைத்து தங்கி இருந்தனர் என்பதை உணரலாம்.
ஆனந்த் தாண்டவம் இங்கு வழிபடு தெய்வ உரு ஆகும். இருவரும் சேர்ந்து மகிழ்ந்து ஆடியதனால் இறைவனை உமையம்மையின் பெயருடன் சேர்த்து உமா மகேஸ்வரர் என்று அழைக்கின்றனர். மதுரை, உத்தரகோசமங்கை மற்றும் இத்திருக்கோவிலில் நடராஜர் மூர்த்தி வீதி வலம் வருவதில்லை. காரணம் இங்கு அவர்கள் கோவிலின் வழிபடு தெய்வமாக வரப் பிரசாதியாக இருக்கின்றனர்.
கதை 4
பூமினேஸ்வரன் கதை
அரக்கன் ஒருவன் தேவர்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள் அனைவரும் வைகுந்தத்துக்கு போய் திருமாலை தரிசித்து தங்களை அரக்கனின் தொல்லையிலிருந்து காப்பாற்றுமாறு வேண்டினர்.
இவ்வேளையில் அந்த அரக்கன் பூமாதேவியை எடுத்துக்கொண்டு போய் பாதாள லோகத்தில் ஒளித்து வைத்து விட்டான். பூமாதேவி நல்லம் என்னும் இத்திருத்தலத்தில் இருந்து பெருமாளை நோக்கித் தவம் புரிந்தாள்.
பெருமாள் வராக அவதாரம் எடுத்து பூலோகத்திற்கு கீழே அகழ்ந்து சென்று பாதாள லோகத்திற்குள் போய் பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவி தவம் இருந்த இடம் என்பதால் இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் பூமினேஸ்வரர் என்றும் பூமிக்கு நாதன் என்றும் அழைக்கப்படுகின்றார்.
வைத்தியநாத சுவாமி
சகல நோய்களையும் தீர்க்கும் பைத்தியநாதருக்கு இங்குத் தனிச்சன்னதி உண்டு. அவருக்கு எதிரே முத்துக்குமாரசாமி சன்னதி என்ற பெயரில் முருகனின் சன்னதி உள்ளது. புரூரவ மன்னனின் நோய் தீர்த்ததனால் சிவபெருமான் இங்கு வைத்தியநாதன சுவாமியாக வணங்கப்பட்டு வருகின்றார் இச் சந்நிதிக்கு வந்து செவ்வாய்க் கிழமைகளில் சிறப்புப் பூஜை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தீராத நோய்களும் தீரும்.
வழிபாட்டின் பலன்
திருநல்லம் பூமிநாதர் கோவிலுக்கு வந்து தொடர்ந்து வழிபடுகின்றவர்களுக்கு சகல நன்மைகளும் கிட்டும். இங்கே இறைவனும் இறைவியும் திருமணம் ஆதம் ஆகும் நிலையில் இருப்பதனால் திருமணத்தடை உள்ளவர்களுக்கு இத்தலம் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகின்றது.
தடை தாமதங்களையும் விக்கின விக்கினங்களையும் நீக்கும் விநாயகர் சபை இங்கே இருப்பதினால் வீடு கட்டுதல், வியாபாரம் செய்தல் போன்றவற்றில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் இங்கு வந்து தொடர்ந்து வழிபடும்போது அவை சூரியனை கண்ட பனி போல் விலகி விடும். எடுத்த காரியம் சிறப்பாக முடியும்.
வைகாசி விசாகத்தின் சிறப்பு
வைகாசி விசாகத் திருநாளன்று இக்கோவிலுக்கு ஏராளமானோர் வந்து இறைவனின் அருள் பெற்று செல்கின்றனர். வைகாசி விசாகத் திருநாள் கொண்டாட்டம் என்பது கிமு மூன்றாம் நூற்றாண்டில் இக்கோவில் பௌத்தர் கோவிலாக இருந்த காலத்தில் இருந்தே சுமார் 2000 ஆண்டுகளாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
எனவே வைகாசி விசாகத் திருநாளன்று திருநல்லம் கோவிலுக்கு வந்து இறைவனையும் இறைவியையும் தரிசித்துச் செல்வது சகல தோஷங்களையும் நீக்கி அனைத்து நன்மைகளையும் அளிக்கும். பௌத்த மடாலயங்கள் இத்திருத்தலத்தில் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு மருத்துவ சேவைசெய்து வந்ததனால் இங்கு செய்யப்படும் வழிபாட்டுக்கு நோய் நீங்கும் நீக்கும் சத்தி உண்டு என்ற நம்பிக்கையும் பல நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வருகின்றது.
வைத்தியத் திருத்தலம்
திருநல்லம் வைத்தியத் திருத்தலமாகவும் விளங்குவதால் இக்கோவிலுக்கு வந்து தொடர்ந்து வழிபதும் பக்தர்களுக்கு மரபு வழி நோய்கள் வராது. பாரம்பரியமாக ஒரு குடும்பத்தில் இருந்து வரும் நோய்கள் வழி வழியாக ஒரு குடும்பத்தில் இருந்து வரும் ஸ்திரி தோஷம், பித்ரு தோஷம், நாகதோஷம் போன்றவை விலகும்.
இத்தோஷங்கள் விலகி திருமணம், குழந்தைப் பேறு, சொத்து சேர்க்கை, வீடு, வியாபாரம் மேன்மை ஆகிய லோக நன்மைகள் அனைத்தும் கிடைக்கும். இத்திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் பூமிநாதனும் தேகசவுந்தரியும் அனைத்து நன்மைகளையும் அருள் புரிவார்கள்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |