இன்றைய ராசி பலன்(06-05-2025)

Report

மேஷம்:

இன்று மனதில் எதிர்க்காலம் பற்றிய சிந்தனையும் கவலையும் உண்டாகும். பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகளை சந்திக்கலாம். பழைய நண்பர்களை சந்திப்பதால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:

நீண்ட நாட்களாக உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். வீண் அலைச்சலால் உடல் சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.

மிதுனம்:

இன்று உங்கள் அறிவுக்கூர்மையால் நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு உங்களுக்கு உண்டான மன கவலைகள் விலகும். வெளியூர் பயணம் சிலருக்கு சாதகமாக அமையும்.

கடகம்:

நேற்று வரை சந்தித்த நெருக்கடிகள் விலகும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். கல்வி தொடர்பான விஷயங்கள் இவர்களுக்கு சாதகமாக அமையும். நன்மையான நாள்.

சிம்மம்:

எதிர்பார்ப்பில் தடையும் தாமதமும் ஏற்படும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.

கன்னி:

பிறர் மீது தேவை இல்லாத சந்தேகங்கள் வரும். வீண் குழப்பத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த வரவு வந்தாலும் செலவும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

நிலை வாசலில் நாய் தலை வைத்துப் படுக்கிறதா? இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்

நிலை வாசலில் நாய் தலை வைத்துப் படுக்கிறதா? இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்

துலாம்:

இன்று மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். குரு பகவானின் பார்வையால் நீங்கள் சந்தித்த நெருக்கடிகள் உங்களை விட்டு விலகும்.

விருச்சிகம்:

போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் லாபம் காண்பீர். வருவாயில் இருந்த தடைகள் விலகும். உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்.

தனுசு:

இன்று உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த குழப்பங்கள் அகலும். நினைத்த வேலையை நினைத்தப்படி முடிப்பீர்கள்.

மகரம்:

மனதில் குழப்பம் உண்டாகும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். நண்பர்களால் சில சங்கடம் உண்டாகும். வழக்கமான வேலைகளிலும் நெருக்கடி தோன்றும்.

கும்பம்: 

வியாபாரத்தில் போட்டியாளராக இருந்தவர்கள் விலகிச்செல்வர். திட்டமிட்டு செயல்படுவீர். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நினைப்பது நிறைவேறும். 

மீனம்:

இன்று நீண்ட நாட்களாக நீங்கள் சந்தித்த பிரச்சனை ஒன்று நல்ல முடிவை பெரும். சமுதாயத்தில் உங்கள் பெயர் உயரும். போட்டியாளர்களால் உண்டான சங்கடம் விலகும். முடியாது என்று நினைத்த வேலை நல்ல முடிவை பெரும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US