இன்றைய ராசி பலன்(13-05-2025)

Report

மேஷம்:

இன்று சிலருக்கு உங்கள் மேல் பொறாமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மன பதட்டம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக உங்களை தொந்தரவு செய்த நபர் விலகி செல்வார்கள்.

ரிஷபம்:

இன்று உங்களின் நேர்மறையான ஆற்றல் வெளிப்படும். மனதில் சில சங்கடம் தோன்றி மறையும். உங்களின் கடின உழைப்பால் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். உங்களுக்கு பிடித்தமான நபருடன் உங்கள் நேரம் செலவிடுவீர்கள்.

மிதுனம்:

மனதில் வீண் சிந்தனை தோன்றி மறையும். ஒரு சிலருக்கு மதியம் மேல் தேவை இல்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தாய் உடல் நிலையில் அக்கறை செலுத்துவது அவசியம்.

கடகம்:

நீங்கள் நினைத்தது தாமதமாக நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு பிரச்சனைகளை சரி செய்வீர். உங்களது முயற்சி தள்ளிப்போகும். பிறரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்: 

வேலை பளு அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் சந்தித்த நெருக்கடிகள் விலகி லாபம் உண்டாகும். நண்பர்கள் மத்தியில் உங்கள் நற்பெயர் உயரும். வெளியூர் பயணங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி:

உங்கள் ராசிக்கு ஆறாமிடம் ராகு இருப்பதால் நீங்கள் நீண்ட நாள் சந்தித்த பிரச்சனை ஒன்று நல்ல முடிவை பெரும். பல ஆண்டு காலமாக முடிவுக்கு வராத என்று எண்ணிய வழக்கு ஒன்று நல்ல முடிவை பெரும்.

கர்மா என்பது உண்மையில் இருக்கிறதா?

கர்மா என்பது உண்மையில் இருக்கிறதா?

துலாம்:

இன்று இறைவழிபாடு சிறந்த பலன் கொடுக்கும். மனதில் உள்ள பாரம் குறையும். நீண்ட நாட்களாக விடை தெரியாத விஷயத்திற்கு நல்ல விடை கிடைக்கும். குருப் பார்வையால் உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்:

பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர். மனம் குழப்பமடையும்.

தனுசு:

பிறரை அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். உதவி செய்வதாக சொன்னவர்கள் இன்று விலகி செல்வார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தாய் வழி உறவால் சங்கடம் உண்டாகும்.

மகரம்:

 வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வராமல் இருந்த பணம் வரும். பழைய முதலீட்டில் இருந்து இன்று ஆதாயம் தோன்றும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கும்பம்:

சதயம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணத்தையும் தவிர்ப்பது நன்மையாகும். எதிர்பார்த்த தகவல் வரும். குருப் பார்வையால் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

மீனம்:

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகி செல்லும். பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். தந்தை வழி உறவால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் விலகும். எதையும் திட்டமிட்டு செலவிடுவீர்கள்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US