முருகப்பெருமானின் சரவணபவ மந்திரத்தை சொன்னால் இத்தனை சிறப்புகளா ?
முருகப்பெருமான் பக்தர்களுக்கு நொடி பொழுதில் துயரை துடைப்பவராக இருக்கிறார். மேலும், முருகப்பெருமான் சிவபெருமனிடம் இருந்து தோன்றியதால் "சிவமும் முருகனும் " ஒன்றே என்கின்றது தத்துவம். அப்படியாக, முருகப்பெருமான் வழிபாட்டில் அவரின் மந்திரங்களுக்கு அதிக அளவில் சக்தி உண்டு.
எப்படி சிவபெருமானுக்கு ஐந்தெழுந்து பஞ்சாட்சர மந்திரம் சக்தி வைத்ததோ, அதேபோல் முருகப்பெருமானுக்கு ஷடாட்சர மந்திரம் ‘சரவணபவ’ மிகவும் சிறப்புக்குரியது ஆகும். அதோடு, எவர் ஒருவர் தினமும் இந்த மந்திரத்தை பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற எதிர்ப்புகள் தடைகள் இவை யாவும் விலகும்.
அந்த வகையில் "சரவண பவ" மந்திரத்தின் சிறப்புகளும் அர்த்தங்கள் பற்றியும் பார்ப்போம்.

சரவண பவ மந்திர அர்த்தம் :
முருகப்பெருமானின் நாமங்களில் " சரவணபவ " என்பதில் ஒன்று என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சரவணபவ என்ற சொல் மிகப்பெரிய சக்தி வாய்ந்த மந்திரமாகும். அதோடு இந்த மந்திரத்தில் உள்ள 6 எழுத்துக்களும் 6 விதமான பலன்கள் நமக்கு கொடுக்கக்கூடியதாக உள்ளது. மேலும், ‘சரவணபவன்’ என்றால் நானல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று பொருள்.
சரம் என்றால் நானல், வனம் என்றால் காடு ஆகும். நானல் எப்போதும் உறுதியாக இருக்கக் கூடியதாகும். இவற்றை போல் முருகப்பெருமான் எப்பொழுதும் யாரும் அசைக்கமுடியாத மற்றும் வீரம், உறுதி ஆகியவற்றை கொண்டவராக இருப்பதால் இவருக்கு சரவணன் என்ற திருப்பெயர் உண்டாயிற்று.
நாம் இப்பொழுது " சரவண பவ" மந்திரத்தின் தத்துவத்தை பார்ப்போம்.

ச - செல்வம்
ர - கல்வி
வ - முக்தி
ண - பகை வெல்லல்
ப - காலம் கடந்த நிலை
வ - ஆரோக்கியம்
முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது. மேலும், இவ்வளவு சிறப்புகள் கொண்ட முருகப்பெருமானின் இந்த மந்திரந்தை தினமும் உங்களால் முடிந்த எண்ணிக்கையில் பாராயணம் செய்து பாருங்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற மன அழுத்தம், குழப்பம், ஆரோக்கிய பிரச்சனை இவை எல்லாம் நொடி பொழுதில் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.
மனிதனின் தலையெழுத்தை மாற்றக்கூடிய வல்லமை கொண்டவர் முருகப்பெருமான். அவரை பற்றிக்கொண்டு பக்தி செலுத்தி பாருங்கள் முருகன் உங்கள் நிழலாக இருந்து காப்பாற்றுவார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |