புதன் அஸ்தமனம் : மே மாதம் முழுவதும் பிரச்சினையில் சிக்கப்போகும் 3 ராசிகள்!
நவகிரங்களின் பெயர்ச்சிக்கு ஜோதிட ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் கிரக பெயர்ச்சி, கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் ராஜ யோகங்கள், முக்கிய கிரகங்களின் உதயம், அஸ்தமனம் ஆகின அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தும்.
அந்தவகையில், கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் மேஷ ராசிக்கு இடம்பெயர்ச்சியடைந்து அஸ்தமன நிலையிலேயே அடுத்த 27 நாட்கள் பயணிக்கவுள்ளார்.
அதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதக பலன்களும், சில ராசிகளுக்கு பாதக பலன்களும் கிடைக்கப்போகின்றது.

புதன் மேஷத்தில் அஸ்தமிப்பதால் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, பொருளாதாரம் என அனைத்திலும் பெரும் சிக்கல்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
மிதுனம்

புதன் பெயர்ச்சி மற்றும் அஸ்தமனத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு, வாழ்வில் பல்வேறு விடயங்களிலும் பாதகமாக தாக்கத்தை ஏற்பட வாய்ப்புள்ளது.
இவர்களின் பொருளாதார நிலையில் பாரிய சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தொழில் விடயத்தில் முன்ஜாக்கிரதையாக நடந்துக்கொள்ள வேண்டியது அவசியம். கவன குறைவால் வேலையை இழக்க நேரிடலாம்.
பணியிடத்தில் சக ஊழியர்களிடம் தேவையற்ற முறன்பாடுகளை தவிர்ப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் வீண் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புண்டு.
கன்னி

புதன் அஸ்தமன காலகட்டம் கன்னி ராசியினருக்கு பாரிய அளவில் பாதக விளைவுகளை கொடுக்கக்கூடும்.
புதிய தொழில் முயற்ச்சிகள் பெரிய முதலீடுகள் என்பவற்றை தவிர்ப்பது நல்லது. இவர்களுக்கு அடுத்த 27 நாட்கள் பெரும் சவாலானதாக அமையப்போகின்றது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பணத்தை கையாளும் போதும் கொண்டு செல்லும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்

புதன் அஸ்தமனமானது விருச்சிக ராசியினருக்கு பொருளாதார நிலையில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தப்போகின்றது.
கடன் பிரச்சினைகளால் மன அழுத்தம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம்.
புதிய முதலீடு செய்பவர்களும் அடுத்த 27 நாட்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். எந்த பணியை செய்யும் போதும் நிதானமாக இருக்க வேண்டும்.