மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய கர்ம ரகசியங்கள்

By Sakthi Raj Nov 14, 2026 11:00 AM GMT
Report

ஜோதிட ரீதியாக நாம் ஒவ்வொரு ராசி மற்றும் லக்னம் கொண்டு ஒருவருடைய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக, முதல் ராசியாக விளங்கக்கூடிய மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று ஜோதிடர் மணிமேகலை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார். அதைப் பற்றி பார்ப்போம்.

ஒருவருடைய லக்னம் அவருடைய முந்தைய பிறவியின் செயல்களால் வடிவமைக்கப்படுகிறது என்று அவர் சொல்கிறார்.

அந்த வகையில், மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளியாகவும், சுதந்திரமான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாகவும், தேவை இல்லாத விஷயங்களுக்கு கடன் மற்றும் ஆபத்துகளை தவிர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய கர்ம அமைப்பாக இருக்கிறது என்கிறார்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய கர்ம ரகசியங்கள் | Mesha Lagna Karma Secrets

6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் சூரசம்ஹாரம் முடிந்ததும் இதைச் செய்ய மறக்காதீர்கள்..

6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் சூரசம்ஹாரம் முடிந்ததும் இதைச் செய்ய மறக்காதீர்கள்..

ஒருவருடைய ஐந்தாம் பாவம் என்பது அவருடைய முந்தைய பிறவியில் புண்ணியம் மற்றும் குலதெய்வத்தை குறிக்கிறது. அதோடு ஒன்பதாம் பாவம் என்பது ஒருவரது பாக்கியம் மற்றும் தர்மத்தை குறிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஆகையால், மேஷ ராசிக்காரர்களுக்கு அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கர்ம வினைகளை குறைப்பதற்கு குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பானதாக இருக்கும் என்றும் இவர்கள் மொட்டை அடித்துக் கொள்வது போன்ற ஆன்மீக பயிற்சிகள் செய்வதும் ஒரு நல்ல பலன்கள் கொடுக்கும் என்றும் அவர் சொல்கிறார்.

அப்படியாக, மேஷ ராசியினர் மற்றும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் அவர்களுடைய இயல்பு தன்மை என்னவென்று புரிந்து கொண்டு செயல்படும் பொழுது நிறைய விஷயங்களை அவர்கள் சரியாக அமைத்துக் கொள்ளலாம் என்று பல்வேறு ஜோதிட தகவல்களையும் ஆலோசனைகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்,     

  Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US