பண வரவு அதிகரிக்க நெய் தீப வழிபாடு
பணம் சேர செல்வத்தை வாரி வழங்குவதற்கு என்று சில கிரகங்கள் இருக்கின்றன. அதேபோல் சில தெய்வங்களும் இருக்கின்றன.
இந்த தெய்வங்களையும் கிரகங்களையும் நம் முறையாக சூட்சுவமான வடிவத்தில் நாம் வழிபடும் பொழுது நம்முடைய பணவரவு என்பது அதிகரிக்கும். வீண் விரயங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
அப்படிப்பட்ட தெய்வங்களை வழிபடுவதற்கு பெரிய வழிமுறைகள் எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்தால் போதும்.
அந்த வகையில் எந்த கிரகத்திற்காக நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பணவரவு உண்டாகும் என்று பார்ப்போம். செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடிய கிரகங்கள் என்று பார்க்கும் பொழுது அது சுக்கிர பகவான் மற்றும் குருபகவான் தான்.
சுக்கிர பகவான் என்பவர் அன்றாடம் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு மட்டும்தான் பணத்தை தருவார். ஆனால் குரு பகவான் நம்முடைய தேவையை விட அதிகமான அளவு பணத்தை தரக்கூடியவர்.
அப்படிப்பட்ட குரு பகவானிற்குரிய கிழமையாக திகழக் கூடாதுதான் வியாழக்கிழமை.இதே வியாழக்கிழமை தான் பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரருக்குரிய கிழமையாகவும் திகழக்கூடியது.
இதோடு மட்டுமா நமக்கு நன்மைகளை மட்டுமே கற்றுத்தருபவர்களாக திகழக்கூடியவர்கள் தான் குருமார்கள்.
இந்த குருமார்களை வழிபடக்கூடிய கிழமையாகவும் வியாழக்கிழமை திகழ்கிறது. அப்படிப்பட்ட வியாழக்கிழமை அன்று தான் நாம் பணவரவு அதிகரிப்பதற்கு தீபம் ஏற்ற வேண்டும்.
வியாழக்கிழமை தீபம் ஏற்ற வேண்டும். சரி, எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும் என்ற கேள்வி வருகிறது அல்லவா? குரு பகவானின் கிழமையான வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்குரிய ஹோரையான காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளோ அல்லது மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள்ளோ நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
இரவு வரக்கூடிய குரு ஹோரையில் நெய் தீபம் ஏற்ற வேண்டாம். காரணம் சூரியன் உதயமாகி இருக்கும் பொழுது ஏற்றுவது தான் நல்ல பலனைத் தரும்.
இந்த தீபத்தை எங்கே ஏற்ற வேண்டும் என்ற கேள்வி அடுத்து வரும். இந்த தீபத்தை நம்முடைய வீட்டில் தான் ஏற்ற வேண்டும்.
வீட்டு பூஜை அறையிலோ அல்லது சமையலறை அறையிலோ வடக்கு பார்த்தவாறு ஏற்றினால் போதும். நெய்யானது நாம் சாப்பிட பயன்படுத்தும் சுத்தமான நெய்யாக இருக்க வேண்டும்.
காரிய வெற்றி ஏற்பட வேர் பரிகாரம் ஒரே ஒரு நெய் தீபத்தை வாரத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரம் மட்டும் நம்முடைய வீட்டில் நாம் ஏற்றி வைப்பதன் மூலம் நம்முடைய பணவரவை அதிகரிக்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |