நாளைய ராசி பலன்(15-12-2025)

Report

 மேஷம்:

எதிர்பாராத நட்பின் அறிமுகத்தால் சிலருக்கு இன்று சில ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலால் உண்டாகும். பெரியவர்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

ரிஷபம்:

சொந்தங்கள் மத்தியில் இன்று நீங்கள் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். சிலருக்கு பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும்.

மிதுனம்:

மனதில் தேவை இல்லாத குழப்பங்கள் வைத்துக் கொள்ளாதீர்கள். சிலருக்கு உடல் ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் சரி ஆகும். சகோதரி வழி உறவால் சிலருக்கு நன்மை உண்டாகலாம்.

மார்கழி மாதத்தில் கட்டாயம் இந்த 3 காரியங்கள் செய்யக்கூடாதாம்

மார்கழி மாதத்தில் கட்டாயம் இந்த 3 காரியங்கள் செய்யக்கூடாதாம்

கடகம்:

பிள்ளைகள் படிப்பு ரீதியாக நீங்கள் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வருமானத்தில் சந்தித்த தடைகள் யாவும் விலகும். சொந்தங்கள் மத்தியில் சாற்றி கவனமாக பேசவேண்டும்.

சிம்மம்:

வியாபாரத்தை விரிவு செய்யக்கூடிய யோகம் கிடைக்கும். வருமானத்தில் சந்தித்த தடைகள் மற்றும் சிக்கல் விலகும். தாய் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டிய நிலை வரலாம்.

கன்னி:

சிலருக்கு மருத்துவ பிரச்சனைகள் சந்திக்கக்கூடும். சித்தப்பா வகை சொந்தங்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். தந்தையின் முழு ஆதரவையும் பெரும் அற்புதமான நாள். நன்மை உண்டாகும்.

துலாம்:

இன்று உடல் சோர்வு சந்திப்பீர்கள். சிலருக்கு தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும். மதியம் மேல் உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை பிறக்கும். எதிர்கால சிந்தனை உருவாகும்.

விருச்சிகம்:

கணவன் வழி சொந்தங்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் விலகும். சொந்தங்கள் மத்தியில் நீங்கள் சந்தித்த பிரச்சனை நல்ல முடிவு பெரும்.

நீங்கள் பிறந்த தேதி இதுவா? 18 வயதிற்கு மேல் உங்களுக்கு இது நடந்தே தீருமாம்

நீங்கள் பிறந்த தேதி இதுவா? 18 வயதிற்கு மேல் உங்களுக்கு இது நடந்தே தீருமாம்

தனுசு:

பிள்ளைகள் உடல் நலனில் முழுமையாக அக்கறை செலுத்த வேண்டும். மருத்துவ ரீதியாக சந்தித்த பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகி நன்மை நடக்கும்.

மகரம்:

கோபத்தை குறைத்துக் கொண்டு பணிவாக நடந்துக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். மதியம் மேல் நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்:

நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களுக்கு நினைத்த இடத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். திருமண பிரச்சனை முடிவிற்கு வரும்.

மீனம்:

ஆலய வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். ஒரு சிலருக்கு தூக்கமின்மை காரணமாக சில தொந்தரவுகள் வரலாம். வயிறு தொடர்பான பிரச்சனை விலகும். முன்னோர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US