முருகப் பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்

By Sakthi Raj Nov 03, 2024 11:38 AM GMT
Report

முருகன் அவன் இன்றி நாம் இல்லை போன்று நம்முடைய மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளார்.அப்படியாக முருகப் பெருமானுக்கு பல பாடல்கள்,மந்திர நூல்கள் இருக்கிறது.நாம் இப்பொழுது முருகன் பெருமையை உணர்த்தும் நூல்களும் அதை எழுதியவர்கள் யார் என்றும் பார்ப்போம்.

கந்த புராணம் - இது ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் உணர்ந்து அனுபவிக்க வேண்டியது. கச்சியப்பரால் இயற்றப்பட்டது.

திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. 

திருப்புகழ் - முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல் ஆகும்.

கந்தர் அநுபூதி - அருணகிரிநாத சுவாமிகள் அருளியது கந்தர் அநுபூதி. 

முருகப் பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள் | Murugan Books List In Tamil

கந்தசஷ்டி கவசம் - பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.

கந்த குரு கவசம் - ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கவசம் இது. 

வேல் விருத்தம் - முருகப் பெருமானின் கை வேலின் புகழ் கூறுவதை மையமாக வைத்து அருணகிரிநாதர் பாடியதாகும்.

மயில் விருத்தம் - அருணகிரிநாதர் இயற்றியது இந்நூல்.

கந்தசஷ்டி விரதத்தின் ரகசியங்களும் வழிபாடும்

கந்தசஷ்டி விரதத்தின் ரகசியங்களும் வழிபாடும்

ஷண்முக கவசம் - ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியது.

கந்தர் கலிவெண்பா - திருச்செந்தூர் முருகனைக் குறித்துப் பாடப்பட்ட ஒரு நூலாகும். இதனைப் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றினார்.

கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் இயற்றிய முருகன் பற்றிய பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US