ஆபத்துகளில் இருந்தும் காக்கும் முருகன் மந்திரம்
என்னதான் மனிதனுக்கு இயல்பாகவே தன்னம்பிக்கை இருந்தாலும் அவனை மீறி அவன் மனம் உடைந்து போகும் தருணம் உண்டாகும்.அந்த வேளையில் அவனுக்கு உறுதுணையாக ஆறுதலாக இருப்பது இறைவழிபாடு மட்டுமே.
நம்மால் முடியாத காரியம்,நம்மை மீறி நடக்கும் விஷயங்கள் எல்லாம் கைகூடி வர நமக்கு பக்கபலமாக இறைவனால் மட்டுமே இருக்கமுடியும்.அப்படியாக பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த இஷ்ட தெய்வமாக இருப்பது முருகப்பெருமான்.
அவரை நினைத்து வழிபாடு செய்தால் எப்பேர்ப்பட்ட நடக்காத காரியமும் கைகூடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மேலும் நாம் இறைவனை மனதார வழிபாடு செய்வதோடு சேர்த்து அவர்களுக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபாடு வைக்க அதற்கு இன்னும் பன்மடங்கு பலன் சேரும்.
அந்த வகையில் நமக்கு தேவை இல்லாத பயம்,ஏதேனும் காரியங்களில் தோல்வி வந்து விடுமோ என்ற அச்சம் உண்டாகும் பொழுது நாம் சொல்ல வேண்டிய முருகனின் சக்தி வாய்ந்த மந்திரம் பற்றி பார்ப்போம்.
மந்திரம்
“ஓம் நமோ பகவதே சரவணபவாய
சக்தி சண்முகாய ருத்ர குமாராய
கெளரி சுதாய சகல பூத கண சேவிதாய
அசுர குல நாசனாய ஆகர்ஷய ஆகர்ஷய
பந்தய பந்தய மாம் ரக்க்ஷ ரக்க்ஷ
ஓம் சகல ஜ்வர நிவாரணாய சகல கஷ்ட நிவாரணாய
ஓம் சரவணபவாய ஓம் செளம், ஸ்ரீம் அனுகிரகம் குரு குரு”
இந்த மந்திரத்தை வீட்டில் முருகன் படம் முன் நெய் விளக்கு ஏற்றி வைத்து மனதார சொல்லி வர மனதில் தைரியம் தன்னம்பிக்கை பிறப்பதோடு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டம் படிப்படியாக குறையும்.மேலும் முருகனின் அருளால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை நீங்கள் சாதுரியமாக கையாளும் பக்குவத்தையும் முருகன் கொடுப்பார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |