குழந்தைகளுக்கு எந்த எண்ணில் பெயர் வைக்கலாம் ?எப்படி வைக்கலாம்?
செல்வத்துள் சிறந்த செல்வம் குழந்தை செல்வம் என்பர். அப்படி இருக்க தங்களது குழந்தை பிறக்கும் முன் பெற்றோர்கள் பல கனவுகளுடன் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? என யோசிப்பார்கள்.
என்னதான் கனவு கோட்டை காட்டினாலும் குழந்தை பிறந்த உடன் பெயர் வைப்பது என்பது மிக சவாலான ஒன்றாக இருக்கும்.
அதாவது குழந்தை பிறக்கும் முன் ஒரு பெயர் தேர்வு செய்து வைத்திருப்பர், அது குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்திருக்கும்.
ஆனால் குழந்தை பிறந்து பின்னர் குழந்தை பிறந்த தேதி, நட்சத்திரம் இதை எல்லாம் வைத்து பார்த்தால் வேற பெயர் வைக்கலாம் என்று ஜோதிடர் சொல்லுவார்.
அப்படி இருக்க பிறந்து குழந்தைக்கு எந்த எண்ணில் பெயர் வைக்கலாம் எப்படி பெயர் தேர்ந்து எடுப்பது பற்றி விளக்கமாக கூறுகிறார் ஆஸ்ட்ரோ பரத் கண்ணன்.