இந்த தேதிகளில் பிறந்தவர்களா நீங்கள்? ஈசியா மத்தவங்க மனதை கட்டுப்படுத்திருவீங்களே
குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை கையாளும் திறனைக் கொண்டுள்ளனர்.
கையாளும் திறன்
நியூமராலஜி படி ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில், அவருடைய உண்மையான ஆளுமை மற்றும் திறன்களை கண்டறிய முடியும் எனக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், 3, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவர்கள், தங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் மற்றவர்களை கையாளும் இயல்பான திறனைக் கொண்டுள்ளனர். மற்றவர்கள் உணராமலேயே அவர்கள் விரும்புவதைப் மற்றவர்களை செய்ய வைக்கும் திறமை அவர்களிடம் உள்ளது.
6, 15 மற்றும் 24 தேதிகளில் பிறந்தவர்கள் அனைவரையும் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவர்களாகவும், மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் வலுவான தொடர்பைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் விரும்புவதைப் பெற மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடலாம்.
9, 18 மற்றும் 27 தேதிகளில் பிறந்தவர்கள், தங்கள் வசீகரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி தங்கள் திட்டங்களை நிறைவேற்றலாம். சில சமயங்களில் அது அவர்களின் தனிப்பட்ட நலனுக்காக உண்மையை மறைக்க வழிவகுக்கும்.
5, 14 மற்றும் 23 தேதிகளில் பிறந்தவர்கள், சூழலுக்கு ஏற்ப மாறும் திறன் கொண்டவர்களாகவும், சமயோசிதமாக சிந்திக்கும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் திறமைகளை பிறர் நன்மைக்காகப் பயன்படுத்துவதும், தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்துவதும் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும்.