இந்த ஒரு விஷயம் உங்கள் வீட்டில் இருந்தால் போதும்- தீய சக்திகள் ஓடிவிடும்
இந்த உலகம் நேர்மறை மற்றும் எதிர்மறை சக்திகள் கொண்டு சூழப்பட்டு இருக்கிறது. அப்படியாக, வீடுகளில் எதிர்மறை அல்லது தீய சக்திகள் சூழ்ந்து விட்டால் நம் வாழ்க்கையில் சந்திக்க கூடாத எல்லா பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
அந்த வகையில் வீடுகளில் தீய சக்திகள் அண்டாமல் இருக்க இந்த ஒரு விஷயம் இருந்தால் போதும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
நாம் அனைவரும் தர்ப்பை புல் பற்றி கேள்வி பட்டு இருப்போம். பொதுவாக, தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. எந்த இடம் மிகவும் சுத்தமாக இருக்கிறதோ, அங்கு தான் வளரும்.இந்ததர்பை புல் கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும்.
எனவே, தர்ப்பை புல் இருக்கும் இடத்தில் தீய சக்திகள் நெருங்காது என்கிறார்கள். மேலும், இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்கு இடங்களில் இந்த தர்ப்பை புல் காணலாம். அதாவது தர்ப்பணம் கொடுக்கும் பொழுது, கையிலும் பிண்டத்தோடும் பயன் படுத்துவார்கள்.
காரணம், தர்ப்பை புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடையதாக கருதப்படுகிறது. தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும், நுனியில் ருத்ரனும் இருப்பதாக ஐதீகம். அது மட்டும் அல்லாமல், இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து இருப்பதால், நம்மை தீய சக்திகள் நெருங்க விடாமல் தடுக்கிறது.
இவ்வளவு அற்புதம் கொண்ட தர்ப்பை புல்லை அக்னிகற்பம் என்றும் சொல்லுவார்கள். இந்த புல், தண்ணீர் இல்லை என்றாலும் வாடாது. அதே போல், நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர்.
இந்த தர்ப்பை புல் இல்லாமல் செய்யும் இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தியானம், பித்ரு தர்ப்பணம், பிராணயாமம் முதலிய காரியங்களில், கையில் பவித்ரம் அணிந்து கொள்ளாமல் செய்வது பலனை தராது.
ஆன்மீக ரீதியாக மட்டும் அல்லாமல் தர்பையில் மருத்துவ குணங்களும் அதிகம் உள்ளது. இதன் ஒரு சில துண்டுகளை குடிக்கும் நீரில் போட்டு, அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும்.
சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு குடிக்கும் பொழுது நமக்கு ஏற்படும் தோஷங்கள் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம்.
மேலும், தர்பைப் புல்களின்காற்றுபட்ட இடங்களில் தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்க விட்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |