இரவில் மட்டுமே திறக்கப்படும் அதிசய கோவில்
கோவில் ஒன்று இரவில் மட்டுமே திறந்திருக்கும் என்றால் நம்பமுடிகிறதா?
காலதேவி அம்மன் கோவில்
மதுரை, சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமத்தில் காலதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் இரவு மட்டுமே திறந்திருக்கும் என்பது நம்பமுடியாத உண்மை.
சூரியன் மறைந்ததும் திறக்கப்பட்டு, மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு நடை சாத்தப்படுகிறது. இந்த கோயிலின் மூலவர் தெய்வமான கால தேவி அம்மன் 27 நட்சத்திரங்கள் 9 நவகிரகங்கள் மற்றும் 12 ராசிகளை தன்னுள் அடக்கி வைத்துள்ளார்.
சிறப்புகள்
கோயிலின் கருவறையும் விமானமும் எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தில் நேரமே உலகம் என பொறிக்கப்பட்டுள்ளது. ராணங்களில் காணக்கூடிய காலராத்திரியைத்தான் இங்கு கால தேவியாக வீற்றுள்ளார். இந்த கோயிலில் வந்து வழிபாடு செய்தால் கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறும் என்பது மக்களின் நம்பிக்கை.
11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும். கெட்ட நேரம் அகன்று, நல்ல நேரம் வரும் என்கின்றனர்.
பௌர்ணமி, அமாவாசை நாட்களில் இங்கு கூட்டம் மிகுதியாக காணப்படுகிறது. உலகிலேயே இரவு முழுவதும் திறந்திருக்கும் ஒரு கோயில் என்றால் அது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.