ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருகிற 10ஆம் திகதி சொர்க்கவாசல் திறப்பு

By Yashini Jan 06, 2025 12:05 PM GMT
Report

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பகல் பத்துதிருவிழா நடைபெற்று வருகிறது.

இவ்விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்நிலையில் வருகிற 10ஆம் திகதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருகிற 10ஆம் திகதி சொர்க்கவாசல் திறப்பு | Opening Of Gate Of Heaven At Srivilliputhur Temple

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகின்றன.

இன்று (திங்கட்கிழமை) பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெறுகிறது.

தினமும் ஆண்டாளுக்கு மார்கழி எண்ணெய் காப்பு நீராட்டு உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.           


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US