12 ராசிகளும் பொங்கல் அன்று செய்ய வேண்டிய தானங்கள் என்ன?
பொங்கல் இந்தியாவில் பல இடங்களில் மிக சிறப்பாக கொண்டப்படும் முக்கியமான இந்து மத பண்டிகை ஆகும்.இந்த புனித நாளில் உலகம் எங்கிலும் உள்ள இந்தியா மக்கள் வழிபாடு செய்து வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.
அப்படியாக,இந்த மகிழ்ச்சியான நாளில் பலரும் சில வசதி குறைபாடுகளால் இந்த பண்டிகை கொண்டாடமுடியாமல் போகிறார்கள்.நம் சாதரண நாளில் தானம் செய்வதை காட்டிலும்,இவ்வாறான பண்டிகையை காலங்களில் தானம் செய்யும் பொழுது பெற்று கொள்பவர்களின் அதீத மனமகிழ்ச்சியால் நமக்கு நன்மை சேரும்.
அந்த வகையில் 12 ராசிகளும் பொங்கல் தினத்தில் என்ன தானம் செய்வதால் அவர்களுக்குரிய பலன்களை பெறுவார்கள் என்று பார்ப்போம்.
மேஷம்- எள், வெல்லம் தானம் செய்யலாம்.
ரிஷபம்- வெல்லம் மற்றும் எள் தானம் செய்ய வேண்டும்.
மிதுனம்- நிலவேம்பு கசாயம் மற்றும் வெல்லம் தானம் செய்வது நல்லது.
கடகம்-எள், அரிசி மற்றும் சர்க்கரை மிட்டாய் தானம் செய்ய வேண்டும்.
சிம்மம்-வெல்லம், எள், கோதுமை ஆகியவற்றை தானம் செய்வது ஐதீகம்.
கன்னி -முந்திரி பருப்பில் செய்த கிச்சடி தானம் செய்ய வேண்டும்.
துலாம்-எள், சர்க்கரை மிட்டாய், அரிசி ஆகியவற்றை தானமாக வழங்குவது புண்ணியமாக கருதப்படுகிறது.
விருச்சிகம்-எள், வெல்லம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.
தனுசு-அரிசி, எள் தானம் செய்வது நல்லது.
மகரம்- கோதுமை, எள், வெல்லம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.
கும்பம்- வெல்லம், எள் எண்ணெய் தானம் செய்ய வேண்டும்.
மீனம்-எள், வெல்லம், உளுத்தம் பருப்பு தானம் செய்ய வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |