இன்றைய ராசி பலன்(08.01.2025)
மேஷம்:
மனத்தெளிவுடன் செயல் படுவீர்கள்.நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.தொலைதூர பயணம் நண்பர்களுடன் சென்று வருவீர்கள்.இருந்தாலும் பிறரிடம் உங்களை பற்றிய ரகசியம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்:
இன்று பிறரிடம் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவேண்டாம்.உங்கள் வேலைகளை நீங்களே செய்து முடிப்பது நல்லது.பிரச்சனைகள் உங்களை தேடி வர வாய்ப்பு உள்ளது.கவனம் அவசியம்.
மிதுனம்:
வேலை பளு அதிகரிக்கும்.உடல் சோர்வு உண்டாகும்.அலுவலகத்தில் எச்சரிக்கையாக பேசுவது அவசியம்.உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.ஆரோக்கியத்தை பார்த்து கொள்வது முக்கியம்.
கடகம்:
அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.குழைந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.குடும்ப உறுப்பினர் மகிழ்ச்சிக்காக செயல்படுவீர்கள்.
சிம்மம்:
தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.வியாபாரத்தை விரிவு செய்வதற்காக நண்பர்களுடன் ஆலோசனை மேற்கொள்வீர்.
கன்னி:
தேவை இல்லாத பிரச்சனை உங்களை தேடி வரும்.பிறரிடம் கொடுக்கும் வாக்கை காப்பற்ற தவறலாம்.வாகனப் பயணம், இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.
துலாம்:
நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.பழைய கடன்களை அடைப்பீர்கள்.உடல் உபாதைகளால் மருத்துவமனை செல்ல நேரிடலாம்.வீண் சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்:
எதிர்பார்த்த செய்தி வரும். எதிர்ப்புகள் விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.மற்றவரால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர். போட்டியாளர் விலகுவர்.
தனுசு:
குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் நீங்கள் மேற்கொள்ளும் வேலைகள் வெற்றியாகும்.ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
மகரம்:
உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். மருத்துவச்செலவு ஏற்படும். வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.சிறு வியாபாரிகள் நிலை முன்னேற்றமடையும்.
கும்பம்:
வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். நினைத்ததை சாதிப்பீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.சுறு சுறுப்பாக செயல்படுவீர். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர்.
மீனம்:
உங்கள் வருமானத்தில் உண்டான தடைகள் விலகும்.பிறரிடம் விட்டு கொடுத்து செல்வது நன்மையை தரும்.கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் வரலாம்.கவனமாக இருக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |