பனை மரத்தை தல விருட்சமாகக் கொண்ட 5 சிவத்தலங்கள்
சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.
இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது.
மேலும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.
பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விட்டுணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
இந்தியாவில் மிக அதிக அளவில் சிவாலயங்கள் அமைந்துள்ளன.
மேலும் இலங்கை, நேபாளம், கம்போடியா என பல உலக நாடுகளிலும் சிவாலயங்கள் அமைந்துள்ளன.
பெரும் பாலானான சிவாலயங்களில் மூலவராக சிவலிங்கமும், பிரகாரங்களில் பிற தெய்வ சன்னதிகளும் உள்ளன.
இந்நிலையில், பனை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட ஐந்து சிவத்தலங்கள் குறித்து பார்க்கலாம்.
1. திருப்பனந்தான்- சோழநாடு
2. திருப்பனையூர்- சோழநாடு
3. திருப்பனங்காடு- தொண்டை நாடு
4. திருவோத்தூர்- தொண்டை நாடு
5. புரிவார் பனங்காட்டூர்- நடுநாடு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |