இன்றைய ராசி பலன்(17-03-2025)
மேஷம்:
இன்று கணவன் மனைவி இடையே தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆதலால் கவனம் அவசியம். மதியம் மேல் உங்கள் வேலையில் சில சிக்கலை சந்திப்பீர்கள்.
ரிஷபம்:
இன்று உங்கள் மனதில் ஒரு வித அமைதியும் நிம்மதியும் உருவாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டமான நாள்.
மிதுனம்:
இன்று பழைய நினைவுகளால் துன்ப பட நேரலாம். செய்த தவறை எண்ணி வருந்துவீர்கள். அலுவலகத்தில் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்:
நண்பர்கள் உதவி இன்று நன்மை தரும். கடன் கொடுத்த பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபார போட்டியாளர் விலகுவர். மனக்குழப்பம் விலகும்.
சிம்மம்:
சிலருக்கு உடல் ரீதியாக சில சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. சொந்தங்கள் உங்களை விட்டு பிரிந்து செல்ல நேரும். மன கவலைகள் அதிகரிக்கும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.
கன்னி:
வெளியூர் பயணம் ஆதாயம் அளிக்கும். வருமானத்தில் உண்டான தடை விலகும். பழைய கடன்களை அடைப்பீர். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.
துலாம்:
இன்று பிறரை பற்றி நன்றாக புரிந்து கொள்வீர்கள். மனதில் உள்ள சஞ்சலம் விலகும். வேலை பளு அதிகரிக்கும். உங்களுக்குரிய மதிப்பு உயரும். வெற்றி காணும் நாள்.
விருச்சிகம்:
எதிர்பாராத செலவு தோன்றி சங்கடப் படுத்தும். பிறரை நம்பி மேற்கொண்ட வேலை இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பம் தோன்றி மறையும். வீண் பிரச்னை தேடிவரும்.
தனுசு:
நீங்கள் எதிர்பார்த்த காரியம் நடைபெறும். குடும்பத்தில் உண்டான கருத்துவேறுபாடுகள் விலகும். இறைவாழிபட்டால் மனம் அமைதி அடையும்.
மகரம்:
வாடிக்கையாளர் அதிகரிப்பர். முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்த வேண்டாம். நினைத்த வேலைகளை நடத்தி முடித்து வருமானம் காண்பீர்.
கும்பம்:
உங்கள் உடல் நிலையில் உண்டான சங்கடம் விலகும். வியாபாரத்தில் சிலருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். எதையும் யோசித்து செயல்படுவதால் நன்மை அடைவீர்கள்.
மீனம்:
இன்று உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் உங்களுக்கு எதிராக திரும்பலாம். பொறுமை அவசியம். இன்று முடிந்த அளவு புதிய வேலைகளை ஒத்தி வைப்பது நன்மை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |