இன்றைய ராசி பலன்(31-03-2025)
மேஷம்:
உங்களது விருப்பம் நிறைவேறும். இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பழைய நண்பர்களை தொடர்பு கொள்வீர்கள். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பொன்னனா நேரம் இது.
ரிஷபம்:
இன்று பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு சிலர் ஆலய வழிபாடு மேற்கொள்வீர்கள். தந்தையுடன் உடனே உறவு பலப்படும். சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும்.
மிதுனம்:
நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து வரும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் சரியாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இன்று சில சிக்கல் வரலாம்.
கடகம்:
இன்று மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். பொருளாதார சிக்கல் விலகும். வெளி வட்டாரத்தில் உங்களுக்கான பெயரும் மதிப்பும் உயரும். பிரிந்து சென்ற உறவு உங்களை தேடி வரும்.
சிம்மம்:
இன்று வியாபாரம் அமோகமாக போகும். மதியம் மேல் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
கன்னி:
எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வாகனப் பயணத்திலும் இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம். எதிர்பார்த்த உதவி வருவதில் தாமதம் ஏற்படும்.
துலாம்:
மனதில் தெம்பும் உற்சாகமும் பிறக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிற்கு பிடித்தவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். நட்பு வட்டாரம் விரிவு அடையும்.
விருச்சிகம்:
நீங்கள் எதிர்பார்த்த செய்தி உங்களை வந்து சேரும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். மற்றவரால் முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்.
தனுசு:
உறவினர்கள் உதவியுடன் உங்கள் வேலை நடக்கும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் நீங்கள் மேற்கொள்ளும், நினைக்கும் வேலைகள் வெற்றியாகும்.
மகரம்:
இன்று தேவை இல்லாத மருத்துவ செலவு உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ராகு கேது சூரியனால் நல்ல லாபம் கிடைக்கும். நிம்மதி உண்டாகும்.
கும்பம்:
வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். நினைத்ததை சாதிப்பீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலம் இழப்பர்.
மீனம்:
இன்று விட்டு கொடுத்து சென்று வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நீங்கள் எதிர்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும். கொடுத்த வகை காப்பாற்றுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |