காதல் முதல் திருமணம் வரை மீன ராசிக்காரர்கள் இந்த பரிகாரம் செய்தால் அமோகமாக வாழலாம்
ஜோதிடத்தில் குரு பகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற மீன ராசிக்காரர்களுக்கு காதல் முதல் திருமண வாழ்க்கை வரை எப்படி இருக்க போகிறது என்று ஜோதிட ஈஸ்வரி அவர்கள் பகிர்ந்து கொள்கிறார். அதைப் பற்றி பார்ப்போம்.
மீன ராசிக்காரர்கள் காதலில் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அன்பை வாரி வழங்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு தாமத திருமணம் பெண்களாக இருந்தால் 26 முதல் 27 வயதா இருக்க வேண்டும்.
ஆண்களாக இருந்தால் 29 வயது என தாமதமாகவே திருமணம் செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
இவர்கள் எப்பொழுதுமே மற்றவர்களுடைய பேச்சை கேட்டு முடிவெடுப்பதை தவிர்த்து அவர்களுடைய வாழ்க்கை துணை உடன் வெளிப்படையாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது திருமண வாழ்க்கையில் நிம்மதியை பெற்றுக் கொடுக்கும்.
இவர்கள் திருமண வாழ்க்கையில் சந்திக்க கூடிய பிரச்சனைகளை தவிர்க்க பெருமாள் மற்றும் தாயார் வழிபாடு செய்வது சிறந்தது. திருப்பதி தரிசனம் செய்வது அல்லது புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆலயம் சென்று இனிப்பு வழிபாடு செய்வதும் இவர்களுக்கு சிறப்பான மாற்றத்தை பெற்றுக் கொடுக்கும்.
மேலும், மீன ராசிக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |