வீட்டில் உள்ள துர் சக்திகள் விலக செய்யவேண்டிய பரிகாரம்
வீட்டில் எவ்வளவு நல்ல சக்திகள் இருக்கிறதோ,அதே போல் துர் சக்திகளும் இருக்கிறது.அந்த துர் சக்திகள் ஆனது நம்முடைய வீட்டில் உள்ளவர்களை மிகவும் பாதிப்பு அடைய செய்யும். அதனால் வீட்டில் நிம்மதின்மை போன்ற சூழல் உருவாகும்.
அப்படியாக,வீட்டில் உள்ள துர் சக்திகள் விலக செய்யவேண்டிய பரிகாரம் பற்றி பார்ப்போம். பொதுவாக அசுரர்களை,தீய சக்திகளை அளிக்கக்கூடிய வல்லமை பெற்றவளாக அருள்புரிபவள் துர்க்கை அம்மன்.
இவளை மனதில் நினைத்து வேண்டுதல் வைத்து பூஜைகள் செய்ய நம் வீட்டில் உள்ள துர்சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை.
இந்த பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வாய்,வெள்ளி ஞாயிற்று கிழமைகளில் செய்வது உகந்ததாகும். இந்த பரிகாரம் செய்ய வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி விடுங்கள்.
பிறகு நம்முடைய வீட்டில் துர்கை அம்மன் படம் இருந்தாலும்,இல்லையென்றாலும் வீட்டில் இருக்கும்அம்மனுக்கு சிவப்பு நிற பூக்களை வாங்கி மாலை அணியவேண்டும்.
பிறகு,ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொண்டு அந்த தண்ணீரில் கொஞ்சம் சீரகம் போட்டு அம்பாளின் முன்பு வைத்து விடுங்கள். அதோடு,ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த கல் உப்பை கொண்டு உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றுங்கள்.
பிறகு,அந்த கல்லுப்பை துர்க்கை அம்மன் படத்திற்கு முன்பாக சொம்பில் இருக்கும் சீரகத் தண்ணீரில் போட்டு விட வேண்டும். இவ்வாறு வீட்டில் உள்ளவர்களுக்கு தனி தனியே சுற்றி கல் உப்பை சீராக நீரில் போட்டு விடவேண்டும்.
பிறகு,அமைதியாக அம்மன் முன் அமர்ந்து மனதார நம்முடைய இன்னல்கள் விலக “ஓம் தும் துர்காயை நமஹ” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி நம்மை சுற்றி வரும் தீய சக்திகள் விலக மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
வேண்டுதல் வைத்து 1 மணி நேரம் கழித்து வீட்டு வாசலில் ஊற்றி விடவேண்டும்.நாம் ஊற்றும் நீர் பிற வீடுகளுக்கு தொந்தரவு தரும் படியாக இருக்கக்கூடாது.
இவ்வாறு தொடர்ந்து செய்து வர வீட்டில் உள்ள எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும்,எதிர்மறை ஆற்றலும் விலகி விடும். இதை நாம் மனதார நம்முடைய கஷ்ட காலம் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் செய்யவேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |