கந்த சஷ்டி: கேட்ட வரம் அளிக்கும் 10 சக்தி வாய்ந்த திருப்புகழ்
கலியுக வரதன் என்று போற்றப்படும் முருகப்பெருமான் உண்மையில் நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நமக்கு உதவி செய்யக்கூடியவர். எதிரிகள் தொல்லைகள் இருந்து அவரை சரணடைய எதிரிகள் நமக்கு நண்பர்களாக மாறும் நிலையை உருவாக்குவார்.
கணவன் மனைவி இடையே பிரிவு என்றால் அவரை சரணடைந்து வழிபாடு செய்ய பிரியாத கணவன் மனைவியாக சேர்ந்து வாழ செய்வார். பொருளாதாரத்தில் கஷ்டம் என்றால் அவரை சரண் அடைந்து வழிபாடு செய்ய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்.
அப்படியாக முருகப்பெருமானை நம் வாழ்க்கையில் என்ன துயரம் என்று அவரிடம் முறையிட்டு வழிபாடு செய்கின்றோமோ அதற்கு கட்டாயம் அவர் வெகு விரைவில் நமக்கான பதிலை கொடுப்பார். அதிலும் முருகப்பெருமானுடைய மந்திரங்களையும் திருப்புகழையும் நாம் சேர்ந்து பாராயணம் செய்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதலுக்கு மிகப்பெரிய அளவில் பலன் கிடைக்கும்.
அதாவது திருமண தாமதத்தை சாதித்துக் கொண்டிருப்பவர் தொடர்ந்து முருக பெருமான் வழிபாடு செய்து திருப்புகழை பாராயணம் செய்து திருமணம் நடந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மையில் அவர் மனதார முருகப்பெருமானை மனதில் நினைத்து திருப்புகழை பாராயணம் செய்த சிறிது காலங்களில் அவருக்கு திருமண வரன் அவர் நினைத்தது போல் அமைந்து நல்ல இல் வாழ்க்கை வாழும் நிலை உருவாகிறது.
இதற்கெல்லாம் முருகப்பெருமான் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையும் அவருடைய சக்தியும் தான். ஆக கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் அவர்கள் பல வேண்டுதல் வைத்து விரதம் இருப்பார்கள். அவர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பாட வேண்டிய திருப்புகழ் பற்றி பார்ப்போம்.

1. குழந்தை வரம் கிடைக்க :
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த,
திருமாது கெர்ப்ப ...... முடலூறித்,
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்,
திரமாய ளித்த ...... பொருளாகி,
மகவாவி னுச்சி விழியாந நத்தில்,
மலைநேர்பு யத்தி ...... லுறவாடி,
மடிமீத டுத்து விளையாடி நித்த,
மணிவாயின் முத்தி ...... தரவேணும்,
முகமாய மிட்ட குறமாதி னுக்கு,
முலைமேல ணைக்க ...... வருநீதா,
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்,
மொழியேயு ரைத்த ...... குருநாதா,
தகையாதெ னக்கு னடிகாண வைத்த,
தனியேர கத்தின் ...... முருகோனே,
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்,
சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
2. திருமண வரன் கிடைக்க :
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே,
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே,
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்,
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே,
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே,
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா,
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே,
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.
3. கல்வியில் தேர்ச்சி பெற :
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்,
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே,
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்,
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
4. தீராத நோய் தீர :
இருமலு ரோக முயலகன் வாத,
மெரிகுண நாசி ...... விடமேநீ,
ரிழிவுவி டாத தலைவலி சோகை,
யெழுகள மாலை ...... யிவையோடே,
பெருவயி றீளை யெரிகுலை சூலை,
பெருவலி வேறு ...... முளநோய்கள்,
பிறவிகள் தோறு மெனைநலி யாத,
படியுன தாள்கள் ...... அருள்வாயே,
வருமொரு கோடி யசுரர்ப தாதி,
மடியஅ நேக ...... இசைபாடி,
வருமொரு கால வயிரவ ராட,
வடிசுடர் வேலை ...... விடுவோனே,
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி,
தருதிரு மாதின் ...... மணவாளா,
சலமிடை பூவி னடுவினில் வீறு,
தணிமலை மேவு ...... பெருமாளே.
5 . நினைத்தது எல்லாம் நடக்க :
நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்,
நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்,
கனத்த தத்துவமுற் ...... றழியாமற்,
கதித்த நித்தியசித் ...... தருள்வாயே,
மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே,
மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே,
செனித்த புத்திரரிற் ...... சிறியோனே,
திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.
6. அரசு வேலை கிடைக்க :
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து,
ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி,
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து,
ஆண்டுபல சென்று ...... கிடையோடே,
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து,
ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன்,
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து,
ஊன்றிய பதங்கள் ...... தருவாயே,
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த,
வேந்திழையி னின்ப ...... மணவாளா,
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச,
வேண்டிய பதங்கள் ...... புரிவோனே,
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து,
மாண்புநெல் விளைந்த ...... வளநாடா,
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற,
மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.
7. வழக்கு பிரச்சனை தீர :
கண்க யற்பிணை மானோடுற வுண்டெ னக்கழை தோளானது,
நன்க மைக்கின மாமாமென ...... முகையான,
கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோடுற,
விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ ...... டுயர்காலன்,
பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள்,
மன்பி டிப்பது போல்நீள்வடி ...... வுடைமாதர்,
பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறு,
கிஞ்சி லத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய்,
விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு,
விண்டு வித்தகன் வீழ்தாளினர் ...... விடையேறி,
வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர்,
வெங்க யத்துரி யார்போர்வையர் ...... மிகுவாழ்வே,
தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல,
முங்கி ளைத்திட வானீள்திசை ...... யொடுதாவித்,
தண்ட ரக்கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசை,
சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.
8 . கருத்து வேறுபாடு நீங்க :
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை,
தந்த மசைய முதுகே வளையஇதழ்,
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி,
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்,
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி,
துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி,
வந்த பிணியு மதிலே மிடையுமொரு,
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள,
மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி,
மங்கை யழுது விழவே யமபடர்கள்,
நின்று சருவ மலமே யொழுகவுயிர்,
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்,
எந்தை வருக ரகுநா யகவருக,
மைந்த வருக மகனே யினிவருக,
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம,
இங்கு வருக அரசே வருகமுலை,
யுண்க வருக மலர்சூ டிடவருக,
என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்,
சிந்தை மகிழு மருகா குறவரிள,
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை,
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா,
திங்க ளரவு நதிசூ டியபரமர்,
தந்த குமர அலையே கரைபொருத,
செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.
9 . எதிரிகள் தொல்லை நீங்க :
தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர,
தவிக்குங்கொடி ...... மதனேவிற்,
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு,
தமிழ்த்தென்றலி ...... னுடனேநின்,
றெரிக்கும்பிறை யெனப்புண்படு,
மெனப்புன்கவி ...... சிலபாடி,
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை,
யுரைத்துய்ந்திட ...... அறியாரே,
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர,
மனுக்குந்தெரி ...... வரிதான,
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு,
மரற்கும்புரி ...... தவபாரக்,
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை,
வரிக்குங்குரு ...... பரவாழ்வே,
கிளைக்குந்திற லரக்கன்கிளை,
கெடக்கன்றிய ...... பெருமாளே.
10 . சகல துன்பமும் விலக :
முத்தைத்தரு பத்தித் திருநகை,
அத்திக்கிறை சத்திச் சரவண,
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்,
முக்கட்பர மற்குச் சுருதியின்,
முற்பட்டது கற்பித் திருவரும்,
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்,
பத்துத்தலை தத்தக் கணைதொடு,
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு,
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்,
பத்தற்கிர தத்தைக் கடவிய,
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்,
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே,
தித்தித்தெய ஒத்தப் பரிபுர,
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி,
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்,
திக்குப்பரி அட்டப் பயிரவர்,
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு,
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்,
கொத்துப்பறை கொட்டக் களமிசை,
குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை,
கொட்புற்றெழ நட்பற் றவுணரை,
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி,
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |