இன்று புரட்டாசி ஏகாதசியன்று நாம் தவிர்க்க வேண்டிய முக்கியமான உணவு
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டிற்கும் மட்டும் பிற தெய்வங்களுடைய வழிபாட்டிற்கு மிக முக்கியமான மாதம் ஆகும்.அப்படியாக இன்று புரட்டாசி மாதத்தின் முக்கியமான வளர்பிறை ஏகாதசி.இன்று விரதம் இருந்து வழிபாடு செய்வதால் பல நன்மைகளை அடையலாம்.அதை பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு விரதம் பின்னாலும் ஒவ்வொரு வரலாறு மற்றும் சிறப்புகள் இருக்கும்.அப்படியாக நாம் மனதார சில விஷயங்களை நினைத்து விரதம் இருக்க கட்டாயம் நாம் நினைத்த காரியம் நிறைவேறும்.
மேலும் வளர்பிறை ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் பொழுது நாம் சில உணவுகளை எடுத்து கொள்ளலாம்,மற்றும் சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது.
அந்த வகையில் புரட்டாசி மாத ஏகாதசியன்று, விரதம் இருப்பவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்மநாபா’’ ஏகாதசி என பெயர். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம்.
இந்த விரதத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் இந்த விரதம் மேற்கொள்வதால் நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. இந்த நாளில் தான் அரிச்சந்திரன், விரதம் இருந்து தாம் இழந்த நாடு, மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே நாமும் இந்த நாளில் விரதம் கடைபிடித்தால் பெருமாளின் அருளை பெற்று குடும்பங்களுடன் மிகவும் சந்தோஷமான வாழ்க்கை வாழமுடியும். உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் மிக தேவையான ஒன்று.
அப்படியாக இந்த விரதம் மேற்கொள்ளவதால் நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் காலம் காலமாக நல்ல தண்ணீர் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |