ஸ்ரீ ராமர் பிறந்த நாள் எப்பொழுது தெரியுமா?
உலகை காக்கும் மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் முக்கியமான அவதாரமாக ஸ்ரீ ராமர் அவதாரம் இருக்கிறது. அப்படியாக, ஸ்ரீ ராம பிரான் அவதரித்த தினம் தான் ராம நவமி என்று கொண்டாடுகின்றோம்.
அதாவது பங்குனி மாத வளர்பிறையில் வரும் நவமி திதியில் ராமர் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இந்த ஆண்டு ராமநவமி விழா ஏப்ரல் 06ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அப்படியாக, ராமர் பிறந்த கதையும் அவரும் சிறப்புகளை பற்றி பார்ப்போம்.
அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தனர். aஆனால், அவருக்கு வெற்றியை நிலைநாட்ட புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை.
அதனால், தசரத சக்கரவர்த்தியின் குருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறார். முனிவரின் பரிந்துரைப்படி அரண்மனையில் புத்ரகாமேஷ்டி யாகம் நடத்தினார்.
அவ்வாறு அவர் யாகம் நடத்தி கொண்டு இருக்க, யாகத் தீயிலிருந்து யக்னேஸ்வரர் தோன்றி, பாயாசம் நிறைந்த ஒரு குடுவையை தசரத சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார். பிறகு அந்த குடுவையில் இருக்கும் பாயசத்தை மன்னரின் மனைவிகள் அருந்த வேண்டும் என்று கட்டளையும் இட்டார். தசரதனின் மனைவிகளும் பாயாசத்தை அருந்தினார்கள்.
யாகத்தின் பலனாக பங்குனி மாதம் நவமி தினத்தில் கோசலை ராமபிரானை பெற்றெடுத்தாள். கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணனும், சத்ருக்கனனும் மகனாக பிறந்தார்கள். இருந்தாலும் ஸ்ரீ ராமர் நவமி திதியில் பிறந்ததற்கான காரணம் இருக்கிறது.
பொதுவாக, அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இதனால் மிகவும் மனம் வருந்திய இருவர்களும், விஷ்ணு பகவானை முறையிட்டு தங்கல் மன வருத்தத்தை தெரிவித்தார்கள்.
அதற்கு விஷ்ணு பகவான், உங்கள் இருவரையும் போற்றும் காலம் வரும். அது வரை காத்திருங்கள் என்றார். அதன்படி அஷ்டமி திதி அன்று எம்பெருமான் கிருஷ்ணர் அவதாரத்தையும், நவமி திதி அன்று ராமர் அவதாரத்தையும் எடுத்தார்.
இதன் அடிப்படையில் நாம் எல்லோரும் கோகுல அஷ்டமியும், ராம நவமியும், அஷ்டமி, நவமி திதியில் கொண்டாடி வருகின்றோம். இந்த நாளில் நாம் பகவானை வழிபட நமக்கு சகல நன்மைகள் அருளிச்செய்கிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |